பக்கம்:மதன கல்யாணி-3.pdf/28

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


- 24 மதன கல்யாணி கண்டு சந்தேகித்து, ஆட்களோடு அங்கே வந்து சேர்ந்தார். சேர்ந்தவுடனே ஜெமீந்தார் லாந்தரை அவர்களது முகங்களிற்கருகில் பிடித்துப் பார்த்து, மதனகோபாலனும், ஒரு கிழவியும் நனைந்து போயிருந்த துணிகளோடு கிடந்ததைக் கண்டு பெரிதும் திகைப்பும், அச்சமும், கவலையும் கொண்டவராய், "மதனகோபாலா! மதனகோபாலா!" என்று இரண்டு மூன்று முறை கூப்பிட்டுப் பார்க்க, அவனாகிலும் கிழவியாகிலும் பேசாமலும் அசையாமலும் இருந்ததைக் கண்டு, முன்னிலும் அதிக திகிலடைந்தவராய், மதனகோபாலனுக்கருகில் வந்து அவனது கையைப் பிடித்துப் பார்த்தார், நாடி நன்றாக அடித்துக் கொண்டிருந்தது; அப்போதே அவருக்கு நல்ல உயிர்ப்பும் துணிவும் திரும்பின. அவர் உடனே அந்தக் கிழவியின் நாடியையும் பிடித்துப் பார்த்து அவளும் உயிரோடிருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டார். உடனே அவர் தமது வேலைக்காரர்களை ஏவி, அவளது கட்டுகளை அவிழ்த்துவிடச் செய்தார். அவள் அதிகமான தண்ணிரைக் குடித்துவிட்டதால், அவளது வயிறு பெருத்த பானை போல் விரிந்திருந்தது. அந்த ஆட்களுள் ஒருவன் அவளைத் துக்கித் தனது சிரசின் மீது வைத்துக் கொண்டு கால் நாழிகை நேரம் வரையில் சுற்ற, வயிற்றிலிருந்த ஜலமெல்லாம் வெளிப்பட்டது. உடனே இரண்டு ஆட்கள், அவர்களிருவரையும் தூக்கிக்கொள்ள, எல்லோரும் கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரது புதிய பங்களாவை நோக்கி விரைவாக நடந்தனர். அப்போது ஜெமீந்தார் விவரிக்க ஒண்ணாத சஞ்சலமடைந்தவராய்ப் பற்பல யூகங்கள் செய்து கொண்டே சென்றார். துப்பாக்கியால் சுடப்பட்டு இரத்தத்தை இழந்து மெலிந்திருந்த நிலைமையில் அவனைத் தாம் தனியாக வெளியில் அனுப்பியதைக் குறித்து அவர் தம்மைத் தாமே வைதுகொண்டார். அந்தக் கிழவி யாராக இருப்பாள் என்றும், அவள் கைகால்கள் எல்லாம் கட்டப்பட்டுக் கிடந்ததன் காரணம் என்னவென்பதை யோசித்து யோசித்துப் பார்த்தார்; அந்தக் கிழவி எவர்களாகிலும் அவ்வறு கட்டப்ப்ட்டு சமுத்திரத்தில் போடப் பட்டிருப்பாளோ என்றும், அதைக் கண்டு மதனகோபாலன் சமுத்திரத்தில் வீழ்ந்து அவளைக் கொணர்ந்திருப்பானோ என்றும் ஒருவித சந்தேகம் கொண்டவராக நடந்தார். மிகவும் கேவலமான