பக்கம்:மதன கல்யாணி-3.pdf/58

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


54 மதன கல்யாணி பங்களாவில் புகுந்து ஏதேனும் துன்பமிழைத்தார்களோ என்ற கேள்வியைக் கல்யாணியம்மாள் முதலில் கேட்க, பொன்னம்மாள் ராத்திரி பங்களாவில் எவ்விதக் கலகமும் நடக்கவில்லை என்றும் அவர்கள் மோட்டார் வண்டியில் போன பிறகு ஒரு நாழிகைக் கெல்லாம் சிவஞான முதலியாரும், போலீஸ் கமிஷனரும், வேறே சில போலீஸ் ஜெவான்களும் வந்து நெடுந்துரம் வரையில் பங்களாவில் காத்திருந்த பின்னர், மோட்டார் வண்டியில் போனவர்களைத் தேடிக் கொண்டு பல இடங்களிற்கும் போயிருக் கிறார்கள் என்றும் கூறினாள். உடனே கல்யாணியம்மாள், போலிஸ் கமிஷனரினது கச்சேரிக்கும் மைலாப்பூரில் உள்ள வக்கீல் வீட்டிற்கும் போய்த் தேடிப் பார்த்து சிவஞான முதலியாரைக் கையோடு அழைத்து வரும்படி ஆளை வண்டியில் வைத்து அனுப்பிய பின், கோமளவல்லியை ஸ்நானம் சாப்பாடு முதலியவைகளை செய்து கொண்டு, தனது அந்தப் புரத்தில் போய் இருக்கும்படி சொல்லி அனுப்பிவிட்டு, அவளும் ஸ்நானம் முதலிய காரியங்களை விரைவாக முடித்துக் கொண்டு திரும்பி வந்து மிகவும் அலுத்துப் போய்த் தனது கட்டிலில் ஏறிப் படுத்தாள். அவளது மனம் பச்சைப் புண்ணாக இருந்தது; தேகம் கட்டிலடங்காமல் தவித்துத் தள்ளாடியது. தான் மிகவும் அருமையாக வளர்த்த மூத்த புத்திரி அவ்வாறு போய் விட்ட துக்கம் அவளால் சிறிதும் சகிக்கக் கூடாததாக இருந்தது. விசனம் பிரம்மாண்டமான காற்றாற்று வெள்ளம் போல அவளது மனதில் பொங்கி எழுந்தது. கண்களில் கண்ணிர் தாரைதாரையாக வழிந்தோடுகிறது. எதற்கும் கலங்காத அதி தீரத்தன்மை வாய்ந்த அந்தச் சீமாட்டி தனது புத்திரியை இழந்த சோகத்தைத் தாங்க மாட்டாமல் கேவலம் ஒரு குழந்தை போல மாறித் தனது சயனத்தில் படுத்துப் புரண்டு கரைந்து விம்மிவிம்மி அழுது பாகாய் ஒடிக் கொண்டிருந்தாள். அந்தச் சமயத்தில் கல்யாணியம்மாளது மனதில் தனது புத்திரி போய்விட்ட ஆறாத் துயரத்தைத்தத் தவிர, வேறே எந்த நினைவும், எந்தக் கவலையும் உண்டாகவில்லை. அவ்வாறு அவள் ஒரு நாழிகை நேரம் வரையில் நெருப்பின் மேல் கிடந்து வெதும்புபவள் போல இருக்க, பக்கத்தில் நின்ற பொன்னம்மாள், முதல் நாளிரவில் நடந்த விவரங்களை எல்லாம்