பக்கம்:மதன கல்யாணி-3.pdf/59

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 55 அறிந்து கொண்டு, அவளது கால்களைப் பிடித்துவிட்ட வண்ணம், பல வகையான ஆறுதல் கூறிக் கொண்டிருந்தாள். அவளது வார்த்தைகளைச் சிறிதும் காதில் வாங்காமல் வேதனைக் கடலில் ஆழ்ந்து கிடந்த கல்யாணியம்மாள் அப்படியே கடுமையான நித்திரையில் ஆழ்ந்துவிட்டாள். அவ்வாறு துயின்றவள் பிற்பகல் மூன்று மணிக்கு எழுந்து உட்கார்ந்து தனது கண்களை விழித்துக் கொண்டு பார்க்க, வக்கீல் சிவஞான முதலியார் சற்று துரத்தில் ஒரு நாற்காலியின் மேல் உட்கார்ந்து ஏதோ பத்திரிகையைப் படித்துக் கொண்டிருக்கக் கண்டான். சடக்கென்று கட்டிலைவிட்டுக் கீழே குதித்தவனாய் "வாருங்கள்; வாருங்கள். நீங்கள் வந்து நிரம்ப நேரமாகக் காத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. இங்கே இருந்த பொன்னம்மாள் எங்கே போய்விட்டாள்? அவளை விட்டு என்னை எழுப்பச் செய்திருக்கக் கூடாதா?" என்று மிகுந்த கிலேசத்தோடு ★ ★ ★ 29-வது அதிகாரம் புளுகு மூட்டை அதைக் கேட்ட சிவஞான முதலியார், "பரவாயில்லை, நான் வந்து அதிக நேரமாகவில்லை. இப்போது தான் அரை நாழிகைக்கு முன் வந்தேன். இதற்கு முன் காலையில் சுமார் 11-மணிக்கு ஒரு தடவை வந்தேன். பொன்னம்மாள் எல்லா விவரங்களையும் என்னிடத்தில் சொன்னதன்றி, அப்போது தான் நீங்கள் அலுத்துப் போய்த் துங்க ஆரம்பித்ததாகவும் சொன்னாள். சரி; நடந்ததெல் லாம் நடந்துவிட்டது. அலுத்துப் போய்த் துங்குகிற உங்களை எழுப்பி என்ன ஆகவேண்டும் என்று நினைத்துக் கொண்டு, நான் உடனே போலீஸ் கமிஷனரிடம் போய் நடந்த விவரங்களை எல்லாம் சொல்லிவிட்டு மைலாப்பூருக்குப் போய் ஸ்நானம் போஜனம் முதலிய காரியங்களை எல்லாம் பார்த்துக் கொண்டு இப்போது தான் வந்தேன். பொன்னம்மாள் இங்கே இதுவரையில் இருந்தவள் இப்போது தான் சாப்பிடப் போனாள்" என்று மிகுந்த விசனத்தோடு பேசினார்.