56 மதன கல்யாணி
அதைக் கேட்ட கல்யாணியம்மாள் மிகுந்த வெட்கமும் துக்கமு மடைந்து, "அப்படியானால், ராத்திரி நடந்த வெட்கக் கேட்டை எல்லாம் போலீசாருக்குச் சொல்லி விட்டீர்களா இந்தச் சங்கதி ஊர் முழுதும் பரவி, ஜனங்கள் எல்லோரும் நம்மைப் பற்றி இழிவாகப் பேசி ஏளனம் செய்து நகைப்பார்களே! அடாடா! பெண்ணை இழந்த விசனத்தோடு ஊரார் சிரிக்கும்படியான தலைகுனிவுக்கும் நாம் ஆளாக வேண்டுமா?" என்று உரிமையோடு அவரைக் கண்டிப்பவள் போலக் கூறினாள். உடனே சிவஞான முதலியார், "அப்படி நானே இந்தச் சங்கதியை வெளிப்படுத்துவேனா? நேற்று ராத்திரி நானும் தாதியுமாகப் போலீஸ் கமிஷனருடைய கச்சேரிக்குப் போய், மோட்டார் வண்டியில் நீங்கள் வந்தீாகளா என்று விசாரித்தேன். எவரும் வரவில்லை என்பதை நான் அறிந்து கொண்டதோடு நேற்று இங்கே வந்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர், ஜெவான்கள் முதலிய எல்லோரும் போலிசைச் சேர்ந்தவர்கள் அன்று எனறும், எல்லோரும் வேஷக்காரர்கள் என்றும், கடைசி வரையில் நம்மை மோசம் செய்து விட்டார்கள் என்றும் அறிந்து கொண்டேன். அவர்கள் உங்களை எங்கே கொண்டு போனார் களோ என்ற பயமும் கவலையும் கொண்ட நான் போலீஸ் கமிஷனரிடத்தில் எல்லா சங்கதிகளையும் ரகசியமாகச் சொல்ல, அவர் உடனே சில ஜெவான்களோடு இந்த பங்களாவுக்கு வந்தார். எதிரிகள் இங்கே வந்து ஏதாகிலும் துன்பம் செய்வார்களோ என்று நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். அதன் பிறகு உங்களைத் தேடும் பொருட்டு அவர்கள் எல்லா ஸ்டேஷன்களுக்கும் செய்தி அனுப்பி, மிகுந்த பிரயாசை எடுத்துக் கொண்டார். இன்று காலை வரையில் இந்த ஊரில் உள்ள எல்லாப் போலீசாரும் உங்களைத் தேடி அலைந்து கொண்டிருந்தார்கள். இன்று காலையில் நீங்கள் வந்து விட்டதைக் கேட்டவுடனே நான் இங்கே வந்தேன்; விவரங் களை பொன்னம்மாள் சொல்ல அறிந்து கொண்டேன்; உடனே கமிஷனரிடத்தில விஷயத்தைத் தெரிவித்தேன். உங்களைத் தேட வேண்டாம் என்று அவர் உடனே எல்லா ஸ்டேஷன்களுக்கும் செய்தி அனுப்பினார். பெண் போய்விட்ட விஷயத்தை வெளியிட வேண்டாம் என்று நானே அவரிடத்தில் கேட்டுக் கொண்டேன்; அவரும அதற்கு இணங்கி விட்டார். ஆனால் போலீசார் என்ற
பக்கம்:மதன கல்யாணி-3.pdf/60
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
