பக்கம்:மதன கல்யாணி-3.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 மதன கல்யாணி புட்டு வாறேனுங்க" என்று கூறிய வண்ணம் அவ்விடத்தை விட்டு விரைவாக மேன்மாடத்திற்குப் போய் சங்கதியைச் சொல்ல, அப்போதே தமது தினபடிக் கச்சேரி வேலையை முடித்துக் கொண்டு திருப்பி வந்து சாய்மான நாற்காலியில் சாய்ந்து, தமது மனைவியோடு சந்தோஷமாகப் பேசிய வண்ணம் இளைப்பாறிக் கொண்டிருந்த சிவஞான முதலியார், அதைக் கேட்டவுடனே திடுக்கிட்டு, "யாரது? மைசூரிலிருந்தா?" என்று கேட்டுக் கொண்டு நிமிர்ந்து உட்கார்ந்தார். அதுகாறும் சந்தோஷத்தினால் மலர்ந்திருந்த அவரது வதனம் உடனே சுருங்கியது. அவர் மிகுந்த சஞ்சலம் அடைந்தவர் போலக் காணப்பட்டார். வேலைக்காரன், "ஆமாங்க. மைசூருலே இருந்து தான் வந்திருக்காங்களாம்" என்றான். அந்த வார்த்தையைக் கேட்ட சிவஞான முதலியார் ஒருவித அச்சமும் கலக்கமும் திகைப்பும் அடைந்தவராய் இரண்டொரு நிமிஷ நேரம் மெளனமாக இருந்த பின், "சரி; நீ போய் அவரை மேலே வரச் சொல்" என்று கூறி, அவனை அனுப்பிவிட்டுத் தமது மனைவியை வீட்டிற்குள் போகச் செய்தபின் ஒருவாறு தம்மைச் சமாளித்துக் கொண்டு தமது சஞ்சலத் தோற்றத்தை மறைத்துக் கொண்டவராய் அந்த நாற்காலியிலேயே உட்கார்ந்திருந்தார். அடுத்த நிமிஷம் செட்டியார் மேன்மாடத்திற்கு வந்து சேர்ந்தார். அவரைக் கண்ட சிவஞான முதலியாரது சஞ்சலமும் கவலையும் உடனே விலகின. ஏனென்றால், அப்போது வரப் போகிறவர் கிருஷ்ணாபுரம் ஜெமீந் தார் என்று நினைத்தே வக்கீல் நிரம்பவும் கலக்கமடைந்திருந்தார். ஜெமீந்தார் மிகுந்த அழகும், வசீகரமும், சதைப்பிடிப்பான அங்கங்களும் பெற்றிருந்த சுந்தர புருஷர். அவர் எப்போதும் விபூதி பூசிக்கொண்டிருப்பார். ஆனால் இப்போது வந்தவர் சுருங்கித் தளர்ந்த சதையும், ஒட்டிப் போன தாடைகளும், மீசை தாடிகளும், கருத்துப் போன உடம்பும், கிழத்தன்மையும் அடைந் தவராகவும், நெற்றியில் பட்டையான நாமம் தரித்தவராகவும் இருந்ததைக் காணவே, இவர் கிருஷ்ணாபுரத்து ஜெமீந்தாரல்ல என்று சிவஞான முதலியார் எண்ணிக் கொண்டார். உடனே அவரது அச்சம் விலகியது; இயற்கை மனோதிடமும் உற்சாகமும் . கம்பீரத் தோற்றமும் திரும்பின. அவர் தமக்கெதிராக நின்ற பசவண்ண செட்டியாரைச் சந்தேகமான பார்வையாகப் பார்த்து,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதன_கல்யாணி-3.pdf/6&oldid=853459" இலிருந்து மீள்விக்கப்பட்டது