பக்கம்:மதன கல்யாணி-3.pdf/64

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


60 மதன கல்யாணி இதனால் நம்முடைய குடும்பத்துக்கு என்றென்றைக் கும் நீங்காத இழிவும் தலைகுனிவும் உண்டாகிவிட்டன. பையன் செய்த காரியங்களைவிட பெண் செய்த காரியம் என்னால் கொஞ்சமும் சகிக்கக் கூடாததாக இருக்கிறது. ஏது! இனிமேல் என்னுடைய உயிர் நிற்காது போலிருக்கிறது. இப்படிப்பட்ட அவமானங்களைப் பொறுத்துக் கொண்டு உயிர் வாழ்வதும் ஒரு வாழ்வாகுமா? நான் வெகு சீக்கிரத்தில் ஏதாகிலும் மார்க்கம் செய்து என்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டுவிடப் போகிறேன். அந்தத் தறுதலைப் பையன் தேவடியாள் விடே கதியாகக் கிடக்கிறான். அவன் அநியாயமாக அழிந்து போய்விட்டவன்தான். அவன் இனி நல்ல வழிக்குத் திரும்பப் போகிறதில்லை. இந்த சனஸ்தானம் இவ்வளவோடு சீர்குலைந்து நாசமடைந்துவிடப் போகிறது. எப்படியாவது பிரயாசைப்பட்டு என்னுடைய சின்னக் குழந்தை கோமளவல்லியை மாத்திரம் எங்கேயாவது நல்ல இடமாகப் பார்த்து இன்னம் சில தினங்களுக்குள் கட்டிக்கொடுத்து விடுங்கள். அதன் பிறகு நான் உயிரையாவது விட்டுவிடுகிறேன்; இல்லா விட்டால் காசிராமேசுவரம் முதலிய இடங்களுக்காவது தேசாந்தரம் போய் விடுகிறேன்" என்று மிகுந்த துயரத்தோடு கூறிக் கண்ணிர் விடுத்தழுதாள். அந்தச் சீமாட்டியினது பரிதாபகரமான நிலைமையைக் கண்டு கலக்கமும் உருக்கமும் அடைந்து சிவஞான முதலியார் அவளுக்கு தேறுதல் கூறும் பொருட்டு ஏதோ வார்த்தைகள் சொல்ல ஆரம்பித் தார். அப்போது அந்த அந்தப்புரத்தின் வாசற்கதவு திறக்கப்பட்டது. ஒரு வேலைக்காரன் முதலில் உள்ளே நுழைந்தான்; ஏதாகிலும் விசேஷ காரியம் இருந்தால் மாத்திரம்; பணிமக்கள் அவ்வாறு அனுமதியின்றி வருவது வழக்கம் ஆதலால், தனக்கு என்ன விதமான புதிய துன்பம் வரப்போகிறதோ என்ற அச்சமும் கவலை யும் கொண்ட கல்யாணியம்மாள் திடுக்கிட்டு வாசற்பக்கம் நோக்க, அது போல சிவஞான முதலியாரும் திரும்பிப் பார்த்தார்; முதலில் உள்ளே நுழைந்த வேலைக்காரனுக்குப் பின்னால், பெருத்த பிரபுவைப் போலக் காணப்பட்ட ஒருவர் பிரசன்னமானார். அவருக்குச் சுமார் 45-வயதிருக்கலாம். அவர் நல்ல சிவப்பான மேனியும் அழகிய வசீகரமான முகமும் பெற்றிருந்தார்; விலை