பக்கம்:மதன கல்யாணி-3.pdf/67

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 63 மான ஒரு காரியத்தை அப்போதே நினைத்துக் கொண்டவள் போல தாதி பொனனம்மாளை அழைத்துக் கொண்டு தனது இரும்புப் பெட்டியண்டை ஒடி அதற்குள் இருந்த ஏதோ ஒரு வஸ்துவை அவளிடம் கொடுத்து, ஏதோ செய்தி சொல்லி அனுப்பி விட்டு, மறுபடி ஒடி வந்து கட்டிலண்டை நின்றாள். அந்தச் சீமாட்டி அவ்வாறு போய்விட்டு வருவதற்குள், அவள் தனது சஞ்சலங்களை எல்லாம் ஒருவாறாக அடக்கிக் கொண்டவளாய் சிவஞான முதலியாரைப் பார்த்து மிருதுவாகப் பேசத் தொடங்கி, "இவர்கள் தான் ராமலிங்கபுரத்து எஜமானரா?" என்று ஐயவினா வாகக் கேட்க, உடனே அந்த விருந்தாளி, "இல்லை. நான் அவர் களுடைய தம்பி, அதோ உட்கார்ந்திருப்பது என்னுடைய சம்சாரம்; என்னுடைய தமயனாா தேக அசெளக்கியமாக இருப்பதால், அவர்கள் வரச் சரிப்படவில்லை. பெண்ணையும் பார்த்துவிட்டு, தாங்கள் கொடுப்பதாக எழுதியிருக்கும் லக்னப் பத்திரிகையையும் வாங்கிக் கொண்டு வரும்படி அவர்கள் எங்களை அனுப்பினார்கள்" என்று சொன்னார். அந்த வார்த்தைகள் பெருத்த இடிபோலப் பாய்ந்து கல்யாணி யம்மாளது மனதைத் தாக்கியது. அந்த அசந்தர்ப்பமான பெருத்த அவகேட்டிலிருந்து தான எப்படித் தப்புகிறது என்ற மலைப்பும் அச்சமும் கொண்ட அநதச் சீமாட்டி சந்தோஷமும் இனிமையும் ஒருவிதக் கிலேசமும் தோற்றிய முகத்தினளாய், "தங்களை எல்லாம் பார்க்க நேர்ந்தது நிரம்ப சந்தோஷமாயிற்று. இன்னமும் தங்களுடைய தமயனார், அவர்களுடைய தேவியார் முதலிய எல்லோரையும் பார்க்கும்படியான ஒரு பாக்கியம் வெகு சீக்கிரத்தில் கடவுளின் கிருபையால் எங்களுக்குக் கிடைக்கும் என்று நம்பு கிறேன். அங்கே இருந்து மனுஷ்யாள் இனறைய தினம் அவசியம் வருவார்கள எனறு நாங்கள் எதிர்பார்த்தோம். இதுவரையில் வரவிலலை ஆகையால், உடனே அவசரத் தந்தியொன்று அனுப்ப வேணடும் என்று இபபோது தான் நாங்கள் யோசனை செய்து கொண்டிருநதோம்; அதற்குள் தாங்களும் வந்தீர்கள்' என்றாள். அதைக் கேட்ட ராமலிங்கபுரம் இளைய ஜெமீந்தார், சந்தோஷத் தினால் மலர்ந்த முகத்தினராய்க் கல்யாணியம்மாளை நோக்கி, "தங்களுடைய கடிதம் எப்போது வரப் போகிறதென்று நாங்கள் up.65.III-5