பக்கம்:மதன கல்யாணி-3.pdf/69

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 65 இல்லை. குணப்பட்ட உடனே மறுபடியும் அவசியம் உங்களுக்குக் கடிதம் எழுதி அனுப்புகிறோம்" என்றாள். அதைக் கேட்ட ஜெமீந்தார், "நான் அப்படி சந்தேகமாகக் கேட்பதைப் பற்றித் தாங்கள் ஆயாசப்படக் கூடாது. அதற்கும் ஒரு காரணமிருக்கிறது. தங்களுடைய கடிதம் எங்களுக்குக் கிடைத்த அதே தபாலில் எங்களுக்கு இன்னொரு கடிதமும் வந்தது; அதில் இருந்த விஷயங்களைப் பார்த்த முதல், மனசில் ஒருவித சஞ்சலம் இருந்து வந்தது. அதனால் நான் அப்படிக் கேட்க நேர்ந்தது; அந்தக் கடிதம் இதோ இருக்கிறது பாருங்கள்" என்று கூறிய வண்ணம் தனது சட்டைப் பையிலிருந்த இன்னொரு கடிதத்தை எடுத்து நீட்ட, ஒரு தாதி அதை வாங்கி கல்யாணியம்மாளிடத்தில் கொடுத்தாள். கல்யாணியம்மாள் அந்தக் கடிதத்தைப் பிரித்துப் பார்க்க, அதன் எழுத்துக்கள் துரைஸானியம்மாளால் எழுதப்பட்டவை யாக இருக்கக் கண்டு பெருத்த கவலையும் கலக்கமும் அடைந் தவளாய் அதைப் பார்க்கலானாள். அது அடியில் வருமாறு எழுதப்பட்டிருந்தது: மதுரை ஜில்லாவில் உள்ள ராமலிங்கபுரம் ஜெமீந்தார் அவர்கள் சமூகத்துக்கு, மாரமங்கலம் ஜெமீந்தாருடைய மூத்த புத்திரியான துரைஸானி யம்மாள் என்ற பெண்ணை உங்களுடைய மூத்த குமாரருக்குக் கலியாணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீங்கள் பிரஸ்தா பித்த சமயத்தில் மாரமங்கலம் ஜெமீந்தாரிணியம்மாள் இடத்தி லிருந்து இன்று உங்களுக்கு ஒரு கடிதம் வருகிறது. அவர்கள் இந்தக் கலியானத்துக்கு இணங்கி விட்டதாகவும், முகூர்த்தப் பத்திரிகை வாங்கிக் கொண்டு போக மனிதரை அனுப்பும்படி யாகவும் எழுதி இருக்கிறார்கள். அந்த விஷயத்தில் ஒரு ரகசியமான சங்கதியை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அதியாவசியமாக இருக்கிறது. மாரமங்கலத் தாருடைய பங்களாவில் மோகனரங்கன் என்ற ஒர் அழகான யெளவனப் புருஷன் இருக்கிறான். துரைஸானியம்மாள் என்னும்