பக்கம்:மதன கல்யாணி-3.pdf/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


66 மதன கல்யாணி அந்தப் பெண், அந்த வடிவழகனிடத்தில் அபாரமான மோகங் கொண்டு அதே பைத்தியமாக இருப்பதன்றி, அவனைத் தவிர, வேறு எவனையும் கலியாணம் செய்துகொள்ள மாட்டேன் என்று மறுத்து விட்டாள். இன்று பகலில்; அந்தப் பையனும், பெண்ணும் அவளுடைய அறையில் தனிமையாக இருந்த சமயத்தில், ஜெமீந் தாரிணியம்மாள் அதை நேரில் கண்டு, பெண்ணைக் கண்டிக்க, பெண் வீட்டைவிட்டே போகிறேன் என்று சொல்ல, அதன் மேல் அந்த அம்மாள் பயந்து கொண்டு, பெண்ணை அறைக்குள் வைத்துப் பூட்டிவிட்டு உங்களுக்கு உடனே கடிதம் எழுதி இருக்கிறார்கள். அந்தப் பையனையும், இந்த பங்களாவை விட்டு எங்கேயோ அனுப்பி விட்டார்கள். அந்தப் பெண் தன்னுடைய உயிர் போவதானாலும் அந்த மோகனரங்கனைத் தவிர வேறொரு வனைக் கலியாணம் செய்து கொள்ளக் கூடாதென்றும் வற்புறுத் தினால், ரகசியமாக ஒடிப் போவதற்கும் உறுதி செய்து கொண் டிருக்கிறாள். நீங்கள் நாளைய தினமே ஒரு மனுஷ்யாளை ரகசியமாக அனுப்பிப் பார்த்தால், பெண்ணைச் சிறையில் வைத்திருப்பது தெரியும். பெண்ணினிடத்தில் பேசிப் பார்த்தாலும், அவள் உண்மையை வெளியிட்டு விடுவாள். ஆகையால், நீங்கள் உடனே மனிஷ்யாளை அனுப்பி விசாரித்துப் பார்த்துக் கொண்டு, உங்களுடைய முடிவைத் தெரிவியுங்கள். அவசரப்பட்டுக் காரியம் செய்வீர்களானால், உங்களுக்கு அவமானமும் பணச் செலவும் ஏற்படுவதொன்று தான் நிச்சயமாக மிஞ்சும். பெண் கலியாணப் பந்தலுக்கு வரப் போகிறதில்லை. இபபடிக்கு, ஓர் எதிர்பாரா நண்பன் - என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்துக் கொண்டு போன போதே, கல்யாணியம்மாள் துரைஸானியம்மாளே அதை எழுதி அனுப்பி இருக்க வேண்டும் என்பதை முன்னிலும் அதிக உறுதியாக நிச்சயப்படுத்திக் கொண்டாள். அந்த மகா அசங்கியமான கடிதத்தைப் படித்துக் கொண்டே போவது கல்யாணியம்மாளுககு விஷத்தை மேன்மேலும் தின்பது போல இருந்தது. அதை முடித்த உடனே அந்த அம்மாளது மனம் எப்படி இருந்திருக்கும் என்பதை யூகித்துக் கொள்ள வேண்டுமேயன்றி, விவரித்துச் சொல்வது பரம