பக்கம்:மதன கல்யாணி-3.pdf/72

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


68 மதன கல்யாணி அதைக் கேட்ட இளைய ஜெமீந்தார் திருப்தியடைந்து அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் நிஜமானதாக இருக்கும் என்றே நம்பினவராய், "ஒகோ! அப்படியா சங்கதி யாராவது விரோதிகள் தான் இப்படி எழுதியிருப்பார்கள் என்று என்னுடைய தமயனாரும் சந்தேகப்பட்டார். அதுவே நிஜமாயிற்று. அப்படியானால், நாங்கள் உத்தரவு வாங்கிக் கொள்கிறோம். குழந்தை குணமடைந்த உடனே தயவு செய்து கடிதம் எழுதுங்கள்" என்றார். அப்போது கட்டிலிற்கப்பால் இருந்த அவரது மனைவி கல்யாணி யம்மாளை நோக்கிப் புன்னகை செய்து மிருதுவான குரலில் பேசத் தொடங்கி, "சரி; இவ்வளவு தூரம் வந்ததுதான் வந்தோம். குழந்தையைப் பார்த்துவிட்டுப் போகிறோம்" என்று நயமாகக் கூறினாள். அதைக் கேட்ட கல்யாணியம்மாளினது அடிவயிற்றில் நெருப்பு விழுந்தது. மனம் அபாரமான கவலையை அடைந்தது. அந்த அம்மாள் அதுகாறும் முழுதும் பொய்களையே மிகுந்த துணிவோடு பேசிக் கொண்டு வந்ததைக் கண்டு சிவஞான முதலியார் தமக்குள்ளாக அஞ்சி நடுநடுங்கி இருந்தார், அவர்கள் பெண்ணைப் பார்க்க வேண்டும் என்ற உடனே அவரது நாடி அடியோடு வீழ்ந்து போய்விட்டது. கல்யாணியம்மாளுக்கு மறுபடியும் பெருத்த அவமானம் ஏற்படுவது நிச்சயம் என்றும், அவள் அதிலிருந்து எப்படித் தப்புவாளோ என்றும் நினைத்து அபாரமான கவலை கொண்டு தவித்திருந்தார். உடனே கல்யாணியம்மாள், "சரி; இனி உங்களுடைய இஷ்டத்துக்கு மாறாக நான் நடக்க மாட்டேன். வாருங்கள் போவோம்" என்று கூறிய வண்ணம் துடியாக முன்னால் நடந்தாள். விருந்தாளியாக வந்த இளைய ஜெமீந்தாரினது மனைவியும் உடனே எழுந்து கல்யாணியம்மாளுக்குப் பின்னால் நடந்தாள். அவர்களைத் தொடர்ந்து ஜெமீந்தாரும் சிவஞான முதலியாரும் சற்று தூரத்தில் வந்த தாதிகளுள் இருவர் மாத்திரம் சிவஞான முதலியாரினது உத்தரவின் மேல் அவர்களோடு கூடவே வந்தனர். அவ்வாறு அவ்விடத்தை விட்டுப் புறப்பட்டவர்கள் எல்லோரும் கோமளவல்லியம்மாள் இருந்த அந்தப்புரத்தண்டை