பக்கம்:மதன கல்யாணி-3.pdf/97

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 93 செய்து விட்டான்? அதையாவது நீ சொல். மற்ற விவரங்களை நான் போலீஸ் ஸ்டேஷனில் அறிந்து கொள்ளுகிறேன்" என்றாள். உடனே மதனகோபாலன், "அம்மணி! அதை வாயால் சொல்லவும் எனக்குப் பயமாக இருக்கிறது. அவர் யாரோ ஒரு கிழவியை நேற்று சாயுங்காலம் கத்தியால் குத்திக் கொன்று விடடார். அவரைக் கையும் மெய்யுமாகப் பிடித்துக் கொண்டார் களாம். அவருக்கு மரண தணடனை நிச்சயமாகக் கிடைக்கும் என்று ஜனங்கள் சொல்லிக் கொளளுகிறார்கள். ஆகையால், தாங்கள் உடனே போய் அதற்குத் தகுந்த வக்கீலை அமர்த்தித் தக்க ஏற்பாடு செய்யுங்கள். நோடடீஸ் விஷயம இருக்கடடும்" என்று உருக்க மாகவும் வறபுறுத்தியும கூறி, கடற்கரையில் இருந்த பொன்னம் மாளையும் வணடிக்காரனையும நோக்கி, விரைவாக வரும்படி கையைத் தடடிச் சைகை செய்தான். அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்கவே, கல்யாணியம் மாள் அளவிலடங்காத அச்சமும், திகிலும், கலக்கமும், கவலையும் அடைந்தவளாகப் பதைபதைத்திருக்க, பொன்னம்மாளும் வண்டிக்காரனும் விரைவாக வந்து வண்டியில் ஏறினார்கள். உடனே கல்யாணியம்மாள் வண்டியை சிவஞான முதலியாரது ஜாகைக்கு அதிக விசையாக ஒட்டுமபடி சொல்ல, வண்டி உடனே புறப்பட்டு ஒடத் தொடங்யது. கல்யாணியம்மாள் மதனகோபாலனை நோக்கி, "அப்பா மதனகோபாலா! நான் போய்விட்டு வருகிறேன். நான் சொன்ன விஷயத்தில கவனம் இருக்கட்டும்; பெரியவரை எப்படியாவது சரிப்படுத்துவது உன்னைச் சோந்த பொறுப்பு" என்று சொல்லிக் கொண்டே சென்றாள். ★ ★ ★ 31-வது அதிகாரம இந்திர ஜாலம் - சல் ஓடிப்போ! இருபத்தேழாவது அதிகாரத்தின் முடிவில் மைனர் அம்பட்டக் கருப்பாயியைக் கத்தியால் குத்திவிட்டு ஓடியதும், கிருஷ்ணாபுரம் ஜெமீந்தாரும், ஆட்களும், ஒரு போலீஸ் ஜெவானும் அவனைப்