பக்கம்:மதன கல்யாணி-3.pdf/98

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


94 மதன கல்யாணி பிடித்துக் கொண்டதும் சொல்லப்பட்டன அல்லவா? அவ்வாறு அவர்கள் தன்னைக் கையும் மெய்யுமாக பிடித்துக் கொண்டு விட்டார்கள் என்ற கலக்கமும் பிரமிப்பும் பேரச்சமும் குலை நடுக்கமும் அடைந்தவனாய் மைனர் மருண்டு மருண்டு திருட்டு விழி விழித்துக் கொண்டு பேசமாட்டாமல் நடுநடுங்கி நிற்க, போலீஸ் ஜெவான், மைனர் செய்த கொலையின் விவரத்தை ஜெமீந்தாரிடத்திலிருந்து கேட்டறிந்து கொண்டான். உடனே ஜெமீந்தார் அங்கே இருந்த தமது ஆட்களுள் சிலரை நோக்கி, தமது பங்களாவிற்கு ஓடி, குத்தப்பட்ட கிழவி இன்னமும் உயிரோடிருந் தால், அவளை உடனே எடுத்துத் தமது மோட்டார் வண்டியில் வைத்து ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போய் போட்டுவிட்டு அந்த விவரங்களையும், தாங்கள் குற்றவாளியை அழைத்துக் கொண்டு நேராகப் போலிஸ் ஸ்டேஷனிற்கு வந்து கொண்டிருப்பதாகவும், மைலாப்பூர் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ச் சொல்லுமபடி கூறி அனுப்ப, ஆட்கள் அவ்வாறே பங்களவை நோக்கி ஓடி, ஐந்து நிமிஷ நேரத்தில் கிழவியை மோட்டார் வண்டியில் படுக்க வைத்துக் கொண்டு, ராயப்பேட்டை வைத்தியசாலைக்குப் போயினர். அவ்வாறு வண்டியில் போனவர்கள் அந்தக் கிழவியினது உயிா இன்னமும் துடித்துக் கொண்டிருப்பதாகவும் அவள் வெகு சீக்கிரத்தில் இறந்து போய்விடுவாள் என்றும் சொல்லிக் கொண்டே காற்றாகப் பறந்து போயினர். ஜெமீந்தாரும், போலீஸ் ஜெவானும் மிகுதி இருந்த நான்கு ஆட்களும் மைனரை அழைத்துக் கொண்டு அந்த ராஜபாட்டையின் வழியாகவே மைலாப்பூரை நோக்கி நடந்தனர். அவ்வாறு ஐந்து நிமிஷ நேரம் நடக்க, அதுகாறும் கிலியினால் கலங்கியிருந்த மைனர், அதற்குள் ஒருவாறு தெளிவும் துணிவும் அடைந்தவனாய்த் தனது மடியில் இருந்த கத்தியை எடுத்து மெதுவாகக் கீழே போட்டான். அதைக் கண்ட ஒர் ஆள் கீழே குனிந்து கத்தியைக் கையிலெடுத்துக் கொண்டான். மைனர் உடனே திமிறத் தொடங்கி போலீஸ்காரனைப் பார்த்து, "அடேய்! எனனை ஏனடா பிடித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அவள் யாரோ பைத்தியக்காரக் கிழவி அவளை நான் எதற்காகவடா கொல்லப் போகிறேன்? எனனை யார் என்று பார்த்துக் கொண்டீர்கள்? நான் மாரமங்கலம் ஜெம்ந்தாரல்லவா? என்னுடைய பங்களா அதோ