உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அந்தக் கடவுள் தானா ?

13


தன்மை; கொடுமை அணிந்துகொண்டிருந்த முடிகள்; குருதிக்கறை படிந்த கைகளோடு இறுகத் தழுவும் அங்கிப் பட்டை அணிந்த ஆணவக்காரர்கள்; உரிமை வேட்கை உலகிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டதற்காகக் கடவுளுக்கு - கற்பனை பூதத்துக்கு- நன்றிசெலுத்திய குருமார்கள்; பயங்கர இறந்த காலத்தின் இந்த நினைவுக் குறிப்புகள், இப்பொழுதும் இருந்துவரும் இந்தக் கொடுந்துன்பங்கள், அச்சமூட்டும் இந்த உண்மைகள், மனித சமுதாயத்தைக் காக்கவும் வாழ்த்தவுமான விருப்பமும் ஆற்றலும் படைத்த கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதை மறுக்கின்றனவே!