உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மதம் 2

நன்மை செய்யும் ஆற்றல் எது ?

இயற்கையை மீறிய பேராற்றல் ஒன்றின்மீது பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைக்கின்றனர். அவர்கள், ஒரு கடவுளை விட்டால், மற்றொரு கடவுளை உடனே கற்பனை செய்துகொள்ளுகிறார்கள். ஜெஹோவா என்ற கடவுளைக் கைவிட்ட பிறகு, மக்களின் நன்மைக்காகப் பாடுபட்டுவரும் பேராற்றல் ஒன்றினைப்பற்றிப் பேசுகிறார்கள்.

இந்தப் பேராற்றல் என்பதுதான் என்ன ?

மனிதன் முன்னேறுகிறான்; அவன், அனுபவத்தின் வாயிலாக உள்ளபடியே முன்னேற வேண்டியவனாக இருக்கிறான். ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல விரும்பும் மனிதன் ஒருவன், இரண்டு சாலைகள் பிரியும் ஒரு இடத்திற்கு வந்து சேருகிறான். எந்த வழியாகப் போகலாம் என்று சிந்திக்கிறான். இடதுகைப் பக்கமாகச் செல்லும் சாலையே சரியானதாகும் என்று நம்பிக்கொண்டு, அவ்வழியே நெடுந்தொலைவு செல்லுகிறான். இறுதியில் அந்த வழி சரியானது அல்ல என்று கண்டுகொள்ளுகிறான். அவன் மீண்டும் திரும்பிவந்து, வலது கைப்பக்கமாகச் செல்லும் சாலைவழியே செல்லுகிறான். அவன் விரும்பிய