உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்மை செய்யும் ஆற்றல் எது?

15


இடத்தைச் சென்றடைகிறான். மறுபடியும் ஒருமுறை அவன் அந்த இடத்துக்குப் போகிறான். இம்முறை அவன் இடதுகைப்பக்கச் சாலைவழியே செல்ல முயலுவதில்லை. னெனில் அவன் ஏற்கெனவே அவ்வழியே சென்று பார்த்திருக்கிறான்; அது தவறான வழி என்பதையும் அறிந்திருக்கிறான். அவன் இம்முறை சரியான வழியை எளிதில் பின் பற்றிச் செல்லுகிறான். இப்படி நடைமுறை நடவடிக்கை யிருந்தும், மதவாதிகள் கூறுகிறார்கள், "மக்களின் நன்மைக்காகப் பேராற்றல் ஒன்று இருந்துகொண்டு வேலை செய்து வருகிறது" என்று!

குழந்தையொன்று சுடர்விட்டு எரியும் நெருப்பைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறது; உடனே தன் இளந்தளிர்க் கையால் அதனைப் பிடிக்கிறது. கை நெருப்பில் பட்டவுடன் பொசுங்கிவிடுகிறது; அதற்குப் பிறகு, அந்தக் குழந்தை தன் கையை நெருப்பிற்குத் தொலைவாகவே வைத்துக்கொள்கிறது. நன்மை பெறுவதற்கான வழியில் உள்ளுக்குள் வேலை செய்யும் உணர்வாற்றல், அந்தக் குழந்தைக்கு ஒரு பாடத்தைக் கற்பிக்கிறது.

உலகில், பட்டுப்பட்டு ஒருசேரக் குவிந்த அனுபவம், ஒரு ஆற்றலாகவும் முயற்சியாகவும் இருந்து, நன்மையை உண்டாக்குவதற்கான முறையில் வேலை செய்துவருகிறது. இந்த ஆற்றல் மனச்சான்று அல்ல; அறிவுடைமையும் ஆகாது. அதற்கு ஒரு விருப்பங் கிடையாது; அதற்கு ஒரு தேவையும் கிடையாது. அது ஒரு முடிவு ஆகும்.

நாம் கொண்டிருக்கும் ஒழுக்க உணர்வை, அதாவது மனச்சான்றை, வைத்துக்கொண்டு, கடவுள் இருக்கும் தன்மையை நிலைநாட்ட, ஆயிரக்கணக்கானவர்கள் முயன்று பார்க்கிறார்கள்.

ஒழுக்க உணர்வு, கடமையுணர்வு. பரிவு முதலியவைகள் இறக்குமதி செய்யப்படும் பண்புகள் என்றும், மனச்