உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மதமும் மூடநம்பிக்கையும்


சான்று என்பது வெளியிலிருந்து ஆண்டவனால் கொடுக்கப் படுவது என்றும் இந்த மதவாதிகளும், தத்துவாசிரியர்கள் என்று சொல்லப்படுபவர்களும் கூறிவருகிறார்கள். இந்தப் பண்புகளுக்கான அடிப்படை இங்கே உண்டாக்கப்படுவதில்லை என்றும், அது மனிதனாலேயேகூட உண்டாக்கப் படுவதில்லை என்றும், கூறி, கடவுள் ஒருவரைக் கற்பனை செய்துகொண்டு, அவரிடமிருந்தே அது வந்தது என்றும் சொல்லி வருகிறார்கள்.

மனிதன், சமுதாயமாக வாழும் உயிரினத்தைச் சேர்ந்த நாம் குடும்பங்களாக, இனங்களாக, நாடுகளாக கூடிக்கூடி வாழ்கிறோம்.

குடும்பம், இனம், நாடு ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களில், யார்யார், முறையே குடும்பம் — இனம் நாடு ஆகியவற்றின் மகிழ்ச்சியைப் பெருக்கக் காரணமாக இருக்கிறார்களோ. அவர்கள் பொதுவாக நல்லவர்கள் என்று கருதப்படுகிறார்கள்; அவர்கள் புகழப்படுகிறார்கள்: போற்றப்படுகிறார்கள்; மரியாதை செலுத்தப்படுகிறார்கள். அவர்கள் நல்லவர்கள் என்று மதிக்கப்படுவதோடு, ஒழுக்கத்திற் சிறந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.

குடும்பம், இனம், நாடு ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களில், யார் யார், அவற்றிற்குத் துன்பத்தை இழைக் கிறார்களோ, அவர்கள், தீயராகக் கருதப்படுகின்றனர்; அவர்கள் குற்றஞ்சாட்டப்படுகிறார்கள்; ஒதுக்கப்படுகிறார்கள்; தண்டிக்கப்படுகிறார்கள். அவர்கள் ஒழுக்கங்கெட்டவர்களாகப் பொதுவாக மதிக்கப்படுகிறார்கள்.

குடும்பமும்,இனமும், நாடும் ஒரு அளவான நடவடிக்கையையும் — ஒழுக்கத்தையும், உண்டாக்கிக் கொள்-