உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதமும் மூடநம்பிக்கையும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நன்மை செய்யும் ஆற்றல் எது?

17


கின்றன. இதில் இயற்கைக்கு மீறிய 'பேராற்றல்' எதுவும் இல்லை!

மனித சமுதாயத்தில் மிகச் சிறத்தவர் கூறுகிறார், "மனச்சான்று அன்பிலிருந்து பிறக்கிறது" என்று.

நல்லது செய்யவேண்டும் என்ற பரிவுணர்ச்சி- கடமையுணர்ச்சி, ஆகியவை, இயல்பாகவே உற்பத்தி செய்யப்படுகின்றன.

காட்டுமிராண்டி மக்களிடையில், செயல்களின் உடனடியான விளைவுகளே, ஆராய்ச்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும். மக்கள் முன்னேற முன்னேற, காலத்தால்- இடத்தால் மிகத் தொலைவிலுள்ள விளைவுகளும் எடுத்துக்கொள்ளப் படுகின்றன. நடவடிக்கையின் தரம் உயர்வடைகிறது. சிந்தித்துப் பார்க்கும் தன்மை வளர்க்கப்படுகிறது. மனிதன், மற்றொருவர் நிலையில் நின்று சிந்தித்துப் பார்க்கத் தெரிந்துகொள்கிறான். கடமையுணர்ச்சி நாளுக்குநாள் வலிவடைகிறது; உறுதியும் பெறுகிறது. மனிதன் தன்னைத் தானே விசாரித்தறிகிறான்.

அவன் அன்பு காட்டுகிறான்; அந்த அன்பு உயர்ந்த நற்பண்புகளுக்கு ஆரம்பமாகவும், அடிப்படையாகவும் அமைகிறது. அவன், அன்பு செலுத்துகின்ற ஒன்றுக்குத் தீங்கிழைக்கின்றான்; அது குறித்துப் பிறகு அவனுக்குத் துயர், மனத்தொல்லை, வருத்தம், மனச்சான்று எல்லாம் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாவற்றி லும் இயற்கைக்கு மீறிய 'பேராற்றல்' எதுவும் இல்லை! மனிதன் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்கிறான்.

இயற்கையே ஒரு கண்ணாடிபோல் விளங்குகிறது.

2