பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 மதுரைக் குமானுர் படியே ஒழுகுவர்; எங்களுரில் அறிவு ஒழுக்கங்களில் சிறந்த சான்றேர் இருந்து ஊராட்சி செய்கின்றனர்; எங்கள் நாட்டு வேந்தனும் அல்லவை செய்யான் ; இவ்வாறு யாங் கள் கவலையற்ற வாழ்க்கை கடத்துவதால் நரை திரைகள் எங்களை நாடா” என்று கூறியுள்ளார். - நாட்டில் ஊர்கள்தோறும் அவ்வக் காலங்களில் விழாக்கள் நடைபெறும். விழாக்கள் நெடுநாட்கள் தொடர்ந்து நடக்கும். அரசர்கட்குப் பிறந்த நாள் விழாக் களும், ஆண்டிற் புதுமழை பெய்தவிடத்துப் புதுநீர் விழாக்களும், கடலாட்டு, குன்று விளையாட்டு, செண் டாட்டு முதலிய விளையாட்டு விழாக்களும் நடைபெற்றன: இவ்விழாக்களில், விழா நிகழ்ச்சி காணவரும் மக்க்ட்கு ஊரவர் வரையாது விருந்து செய்வர். போர் செய்து வெற்றிபெற்ற வேங்கன், தன் வீரர் சூழ இருந்து விரும் துண்டு வெற்றிவிழாக் கொண்டாடுவன். அக்காலத்தே கூத்தும் பாட்டும் மிகுந்து மக்கள் உள்ளத்தே மிக்கி கிள்ர் சியை புண்டுபண்ணும். வெற்றி வகையால் தான் ஈட்டி வந்த பொருளை வேந்தன் பலர்க்கும் வழங்கிப் பாட்டும் உரையும் பெறுவன். அறவழியில் போர் செய்து மாண்ட வீரர்க்குக் கல்லெடுத்து, அதன்கண் அவருடைய பெயரும் பீடும் எழுதி, நீராட்டி நிறுத்தி விழாக் கொண்டாடினர். சுருங்கச் சொல்லின் காடுகளின் சிறப்பெல்லாம், அவற் அறுள் மக்கள் கொண்டாடி மகிழும் விழாக்களேயே பொறுத் திருந்ததென்றே கூறலாம். கடவுள் வழிபாட்டிற்கு அக்காலத்தே இடமில்லா மல் இல்லே. குறிஞ்சி நாட்டவர் முருகனேயும், முல்லை நாட்டவர் திருமாலேயும், மருத நிலத்தவர் இந்திரனேயும், நெய்தல் கிலத்தவர் வருனனையும், பாலகிலத்தவர் கொற்ற வையையும் சிறப்பாக வழிபட்டனர். இங்கினம் வழிபாட்டு வகையில் கடவுளர் பலர் கூறப்படினும், எல்லாவற்றிற் கும் மேலாய கடவுள் ஒருவரே; அவர்க்கு இன்ன உரு, இன்ன கிறம் என்பது கிடையாது; உயிரும் உடம்புமாகிய எல்லாவற்றி அடைய இயக்கங்கட்கும் காரணராகலின் نمون