பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்க காலம் 9 அவர் இயவுள்; ஐம் பொறிகளேயும் மன முதலிய உட் கருவிகளையும் கடந்து கிற்றலால் கடவுள்' என்ற கொள்கை அம்மக்கள் மனக்கே வேரூன்றியிருந்தது. இன்னவுரு வென்றும் இன்ன நிறமென்றும் சொல்லற்கியலாத அக் கடவுளை வழிபடுதற்குக் குறியர்க, மன்றங்களில் கந்து எனப்படும் தறிகளே கட்டு அவற்றை வழிபட்டனர். பகை யாசர் காட்டினின்றும் சிறை கொணரப்பட்ட மக்களுள் மகளிர் பலரும் இம் மன்றங்களில் இருந்து இக்கந்துக் குறி களே வழிபட்டனர். குறியென்பது வடவாரிய மொழியில் லிங்கம் எனப்படும். இக்கருத்தை யறியாத பிற காட்டு ஆரியரையுள்ளிட்ட மக்கள், இக்கந்து வழிபாட்டைத் தவருகக்கொண்டு பொய்க் கருத்துக்களைப் புகுத்தி விட்டனர், உயிர் வாழ்வுக்கு இம்மை, மறுமை, வீடு என்று மூன்று நிலை யுண்டு. இம்மை வாழ்வு இவ்வுலக வாழ்வு; இவ்வுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து புகழ் பெற்ருேர் மறுமை யுலகில் இமையவராய் இன்புறுவர்; இவ்விருவகை வாழ்வும் இனிது அமைவது வேண்டி கிலத்தோறும் தெய்வங்கள் நாட்டப்பட்டன. விடுபேறு என்பது பிறவாநிலை. அதனை வேண்டுவோர்க்குக் கந்துக் குறி வழிபாடு அமைந்திருந் தது. தொல்காப்பியமும் அதன்கட் காணப்படும் பொருட் கூறுகட்கேற்பச் சான்ருேர் பாடிய பல பாட்டுக்களிலிருந் தும் தேர்ந்து தொகுத்துக் கொள்ளப்பட்ட் தொகை நூல் களுமே இப்போது கிடைக்கின்றன. தொகுத்தற்கு நிலக்களமாயிருந்த குறிப்புக்களும் பிற பாட்டுக்களும் வரலாறுகளும் நூல்களும் இறந்து போயின. அதனுல் இக்கடவுள் நிலையை விள்ங்க விரிவாக அறிந்துகொள்வது அருமையாக இருக்கிறது. மக்களைப்போல நம் நாட்டில் நூல்கள் இறப்பதும் இயற்கை. பழங்காலத்துத் தமிழ் வேந்தர் மேற்கொண் டிருந்த போர் முறைகளுள் பகைவருறைத் திக்கிசை யாக்கு தல் ஒன்று. அதனுல் நூல்கள் அழிதற்கு இடமுண்டு. வேற்று காட்டவர் போந்து இந்நாட்டு மக்கள் இவர்தம் தொன்மை புனர்ந்து செம்மை விலை பெருவாறு செய்வது