பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 மதுரைக் குமானுர் கிற்கும் சிறிய கறிய முன்னேக்கீரையை அவ்வூரவர் கொணர்ந்து சமைப்பர். அவரிடம் செல்லும் விருந்தின ருக்கு வரகின் சோறும் முன்னேக் கீரையும் வழங்கப்படும். அதனுல் சிறார் வேந்தர்பால் பெருஞ்செல்வம் உண்ட்ாதல் அரிது. இத்தகைய சிறார் வேந்தர்பால், பெருஞ் செல்வத்துக்கு மாருகச் சான்ருேர் சால்பறிந்தொழுகும் தமிழ்ப் பண்பாடு தக்கிருக்குமாயின், அவர்களே எம் போலும் தமிழ்ப் புலவர், அப்பண்பைவியந்து என்றும் பொன்ருச் சிறப்பமைந்த தமிழ்ப் பாட்டில் நிறுவி, -

  • எம்மால் வியக்கப் படூஉ மோரே

இடுமுள் படப்பை மறிமேய்ந் தொழிந்த குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு புன்புல வாகின் சொன்றி யொடு பெறு உம் சிறுார் மன்ன ராயினும் எம்வயின் பாடறிக் த்ொழுகும் பண்பி னரே ” அவரைப் பாராட்டுவர். வேந்தருடைய படையும் பொரு - ளும் பற்றிக் கூறப்படும் பெருமை சிறுமைகளை எம்போல் வார் பொருளாகக் கொள்ளார்; எம்முடைய பாடறிந், தொழுகும் பண்புடைமையே வேந்தர்ை யாம் வியத்தற் குப் பொருள்ாவது என அறிக. - - - அன்றியும், உலகில் உயிர் வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதென்பதை யாம் அறியேமல்லோம்; நன்கு அறிந்துளோம். பொருளில்வழி மிக்க துன்பம் வந்து பொருந்தும் என்பது நாங்கள் அறியாததன்று : அப் பொருள் உதவி நாடியே நாங்கள் பழுமரங் தேரும் பறவை போல வளங்கெழு செல்வரை நாடிச் சென்ற வண்ணம் இருக்கின்ருேம். இவ்வாறு பரிசில்வாழ்க்கையேமாயி லும், எமது பாடறிந்தொழுகும் பண்புடைச் செல்வர் தரும் செல்வத்தையே விரும்பும் மானமுடையேர்ம்: அப்பண்பில்லாத அதனே மேற்கொள்ளும் நல்லறிவில்லாத வேந்தர்களையோ, பிற செல்வர்களையோ கன வி லும் விரும்பமாட்டோம். அவ்வகையில் யாங்கள் உயிர்விடுதற் கேதுவாகிய மிக்க பெருந்துன்பம் எய்துவதாயினும்,