பக்கம்:மதுரைக் குமரனார்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 மதுரைக் குமரனுர் அவரே, நிற்காணின் புறங்கொடுத்தலின் ஊறறியாமெய் யாக்கையொடு கண்ணுக் கினியர் செவிக்கின் ஞரே அதனல், யுேமொன் றினியை அவருமொன் றினியர் ஒவ்வா யாவுள' மற்றே வெல்போர்க் கழல்புனை திருந்தடிக் கடுமான் கிள்ளி கின்னை வியக்கும் இவ்வுலகம் அஃது என்னே பெரும உரைத்திசின் எமக்கே என்று பாடினர். இதன்கண், திருக்கிள்ளி கண்ணுக்கு இனியஞ்காமைக்குரிய காரணத்தை 'அமர்காணின் அமர் கடந்து அவர் படைகளை விலக்கி மேற்செல்லாவாறு கற்சிறைபோலத் தடுத்து எதிர் கிற்றலின், வாட்புண். ஆணுற்று வடுவுடைய யாக்கையுடையணுயினுய் ' என்றும், ! பகைவர் கண்ணுக்கு இனியராதற் கேது, அவர்கள் கின்னேக் காணின் புறங்கொடுத் தோடிடுவர்; புறங்கொடுத் தார்மேற் படையெறிதல் போரறமன்றெனக் கருதி, நீ படை யெறிந்து புண் செய்யாய், அதனல் அவர்கள் வாள் செய்யும் புண்ணுல் வடுப்படாத மெய்யுடையாயினர்' என்றும் கூறியது, முன்னேயது புகழ்வதும் பின்னேயது இகழ்வதுமாய் மிக்க் சுவை பயந்து கின்றது. இத்தகைய நின்னைச் சான்ருேருலகம் வியந்து புகழ்வதன்றிச் செயற் பாலது பிறிதியாதும் இல்லை யென்பதை உலகின்மேல் வைத்து, “கின்னே வியக்கும் இவ்வுலகம் அஃது என்னே’ என்ருர். 'பெரும எம்க்கு அ ஃ து உரைத்திசின் ' என்பது குமரனுரது பேரன்பினே வெளிப்படுத்தக் கண்டான் திருக்கிள்ளி. அவர் இன்முகம் கானும் அளவு பெருஞ் செல்வத்தைப் பரிசில் நல்கிப் பாராட்டினன். குமரனர் அவன்பால் விடைபெற்றுக்கொண்டு காவிரிக் கரை வழியே கொங்குநாடு நோக்கிச் சென்ருர். - கொங்கு நாடு போந்த மதுரைக் குமாளுர் காவிரிக் கரையிலுள்ள ஒடை யென்னும் ஊர் வழியாக வந்து ஈர்க், துறை யடைந்தார். இவ்வோடை இதுபோது ஈரோ