பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அ.ச. ஞானசம்பந்தன் கருத்து யாதெனில், எல்லாவற்றையும் ஒன்றாகக் கண்டு ஒன்றின் பல்வேறு வடிவங்களாகப் பார்க்கும் மனநிலை - இதுதான் கீழைநாட்டுச் சமயம். இச் சமயக் கொள்கை விஞ்ஞானத்தினை அதனோடு தொடர்பு படுத்தவே இல்லை. அப்படியானால் விஞ்ஞானம் வேண்டாவா? விஞ்ஞானமும் விஞ்ஞானத்தின் பயன்களும் வேண்டும். மைக் இருந்தால் பேச, பிறர் கேட்க வசதியாக இருக்கும். மைக் வேண்டும். மைக் இல்லை யென்றாலும் பேசத்தான் வேண்டும். மைக் இருந்தால் தான் பேசுவது, பாடுவது என்றால் அது பேச்சுக்கோ பாட்டுக்கோ மதிப்புத் தராத நிலைமை. ஆகவே, இந்த நாட்டுக்காரன் உலகத்தில் அறிவை வளர்த்து அதனால் பெறுகின்ற பயன்கள் அனைத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், அப் பயன்கள் கிடைக்கவில்லை என்றால் அதற்காக ஏமாந்து ஏங்கி, அதனால் வாழ்வும், வாழ்வின் பயனும் இல்லாமற் போய்விடக் கூடாது என்றும் எண்ணினான். வாழ்க்கை என்பது வாழ்பவன் மனத்தில் இருக்கிறதே தவிர அறிவின் வளர்ச்சியில் இல்லை என்றான். ஆகவே, இவன் வளர்ச்சி, உணர்வின் துணைகொண்டு வளர்வது. அறிவின் பயனால் விளைந்த விளைவு களைப் பயன்படுத்திக் கொண்டு அதே சமயத்தில் உணர்வின் அடிப்படையில் வளர வேண்டும் என்று வாழ்க்கையைப் பற்றி இவன் எண்ணினான். எனவே தான், அறிவின் துணைகொண்டு வளர்ந்த விஞ்ஞான வளர்ச்சி உடைக்க முடியாதது என்ற நம்பிக்கையூட்டி 'ஆட்டம் என்று பெயரிட்டுப் பின்னர் அதனையே