பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 அ.ச. ஞானசம்பந்தன் பிளமிங் வாழ்க என்று வாழ்த்திவிட்டுப் போட்டுக் கொள்வதில்லையே! நம் புற வாழ்வு வளம்பெற உழைத்துப் பல புதுமைகளை ஈந்த எடிசனோ, மார்க்கோனியோ, பிளமிங்கோ நம் நன்றிக்குரிய பெரியவர்களாக ஆகவில்லை. ஆனால், போட்டிருக் கிற சட்டையைக் கேட்டால் உள்ளே அணிந்துள்ள பணியனையும் சேர்த்துக் கொடு என்று கூறிவிட்டு, அதனுடன் அமையாமல் இடக் கன்னத்தில் அறைந்தால் வலக் கன்னத்தையும் காட்டு என்றார் ஒரு பெரியவர். புத்தனின் சீடனான உபகுப்தன் தெருவில் போய்க்கொண்டிருக்கிறான். உபகுப்தனிடம் அவ்வூர்ப் பெண் ஒருத்திக்கு எல்லையற்ற ஈடுபாடு. அவளோ உடலை விற்று வாழும் இயல்பினள். அவனைக் கண்ட அவள், "உபகுப்தா! இந்தக் கெளதம சாம்ராஜ்யத்தில் கால்வாசி என் காலடியில் உள்ளது. அவ்வளவையும் உன் காலடியில் காணிக்கை ஆக்குகின்றேன். நீ என்னிடம் தங்கிவிடு” என்றாள். உபகுப்தன் சிரித்தான். "தாயே! உன்னிடத்தில் வர வேண்டிய காலம் உள்ளது! அக் காலம் வரும்போது நான் வருகிறேன்” என்று கூறிவிட்டுப் போய்விட்டான். விரைவாக வாழும் வாழ்க்கையை உடைய அவளுக்குத் தொழுநோய் பற்றிக் கொண்டதால் யாரும் சீண்டுவாரற்றுப் போய்விட்டாள். உடல் அழுகும் தொழுநோயோடு நகரில் எல்லையில் அவல முற்றுக் கிடக்கிறாள். அவள் உடலழகில் ஈடுபட்டு வருணித்துக் கவிதை பாடிக் காலடியில் வீழ்ந்தவ ரெல்லாம் இன்று அவளைக் காறியுமிழ்ந்து செல்கின்றனர். எப்படி இருந்த வாழ்க்கை இப்படி ஆகி விட்டதே என்று எண்ணி ஏங்கினாள். அப்போது உபகுப்தன் அங்கே வருகின்றான். அவளைத் துரக்கி மடியில் கிடத்தித் தலையை நீவிப் புண்களைக் கழுவி மருந்திடுகிறான்.