பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 அ.ச. ஞானசம்பந்தன் வாதிகள் ஏற்றுக்கொள்வதில்லை. காணப்படுகின்ற அடிப்படையில் வைத்துத்தான் எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்ற முடிவுக்கு வருபவர்கள் ஆதலின் அந்த அடிப்படையில்தான் பேசுகிறார்கள். உலகில் எல்லாப் பொருள்கட்கும் மூல காரணமாய் இருப்பவை அணுக்கள். தமிழில் அணுக்கள் எனக் கூறும்போது ஆங்கிலத்தில் வரும் "ஆட்டம்” (atom) என்ற சொல்லோடு சேர்த்துக் குறிப்பிட வேண்டா. தமிழில் அணுக்கள் என்று கூறுவது எல்லாவற்றிற்கும் அடிப்படையாக இருக்கின்ற மிகமிகச் சிறிய நுண்ணிய தன்மையைத்தான் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும். "ஒத்துறு புணர்ச்சியில் உருக்கள் பலவாம்". இந்த நாட்டவரின் உலகாயதக் கொள்கைப்படி உலகம் அணுக்களின் கூட்டத்தால் பல்வேறு வடிவமாக உள்ள்து. இந்த அணுக்கள் ஒன்றோடொன்று சேரும்போது பல்வேறு வடிவங்களைப் பெறுகின்றன. "வைத்துறு கலாதி பல மண்ணினால் வருமா போல்" மண் இருக்கிறது, அதனை எடுத்துக் குடமாகச் செய்கின்றோம், சட்டியாகச் செய்கின்றோம், செப்பாகச் செய்கின்றோம், அழகான வெவ்வேறு பொம்மைகளாகச் செய்கின்றோம். என்றாலும் மூலப் பொருள் மண்தான். இந்த மண், பல்வேறு வடிவத்தைப் பெறுவதுபோல, நுண் பொருளாக இருக்கின்ற அணுக்கள் இருக்கின்றனவே, அவை சேரும்போது சேர்க்கையின் அளவின் பிரகாரம், புல்லாய், பூடாய், புழுவாய், மரமாய், கல்லாய், விளைநிலமாய், மனிதனாய் விளங்குகின்றன என்றனர். இதற்கு மேலும் ஒரு படி செல்கின்றனர். 'புத்தி, குணம், பொறி, புலன்கள் இவையெல்லாம் நுண்மையாகக் காட்சி அளிக்கின்ற இந்த உலகம் இருக்கின்றதே, அதில்