பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 99 நுண்மைப் பொருள்களாக இருக்கின்றனவே புத்தி (intellect), குணம் (character), நல்ல பொறி புலன்கள் (fine senses) இவை என்ன ஐயா? என்று வினவினால் "இவையெல்லாம் இதில் வரும், இந்த அணுக்கள் ஒன்றாகச் சேரும்போது அவற்றில் தோன்றும் இயல்புகள், குணங்கள்" என்கிறார்கள். களிமண்ணைக் கொண்டு மனிதன் போன்ற உருவம் செய்தால் மனித உரு அதற்கு வந்துவிட்டது. சட்டியாகச் செய்தால் சட்டி உருவம் வந்து விடுகிறது. சட்டிக்கென்று சில குணங்கள், பொம்மைக்கென்று சில குணங்கள். சோற்றைச் சட்டியிலிட்டுப் பிசைந்து உண்ணலாம். பொம்மையிலிருந்துப் பிசையவோ உண்ணவோ இயலாது. பொம்மையும், மண் சட்டியும் மண்தான். சட்டி என்று பண்ணப்படும்போது அதற்குச் சில இயல்புகள், பொம்மை என்று பண்ணப் படும்போது அதற்குச் சில இயல்புகள்; இவை இரண்டின் இயல்புகளும் வடிவுக்கு ஏற்ப வேறுபட்டு விடுகின்றன. அதேபோல நுண்மையான இயல்புக ளாகிய புத்தி முதலானவைகளெல்லாம் இந்த அணுக்கள் மனித வடிவைப் பெறும்போது அவைகட்கு இயல்பாக அமைந்துவிடுகின்றன. அணுக்கள் மரத்தினுடைய வடிவத்தைப் பெறும்போது அதற்குச் சில இயல்புகள். மேல்நோக்கி வளர்தல், பச்சை நிறமாக இருத்தல், காய்கனி முதலியன தருதல், வேர் கீழ்நோக்கி ஓடுதல், பூமியிலிருந்து சத்தையும் நீரையும் எடுத்தல் போன்ற இயல்புகள் தாமாகவே ஏற்பட்டு விடுகின்றன. இது தாவரத்தின் இயல்பு. இதில் என்ன அதிசயம்? என்று கூறிய அவர்கள், இந்த அளவோடு நிறுத்தவில்லை. "சட்டி இருக்கிறது; அது உடைந்தால் மண் தானே. அது 10.6s. T.-8