பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் $ 145 யனைத்தும் ஜடப் பொருளின் இயல்பாம். எதை எடுத்தாலும் அதுதான் அதன் இயல்பு என்று சொல்லுகின்றவர்களுக்கு எதையுமே விளங்கிக் கொள்ள முடியாத சூழ்நிலை. ஆனால், அதே நேரத்தில் அது அப்படி இல்லை என்று நிரூபித்துக் காட்டக்கூடிய சூழ்நிலையிலே நாமும் இல்லை. வரையிலே சொல்லப்பட்ட இந்த உலகாயதத்தைத் திருப்பிப் பார்த்து விடலாம். காணப் படுகின்ற இந்தப் பிரபஞ்சம் என்று சொல்லுகின்ற ஒன்று அணுப் பொருளின் கூட்டம். அணுப்பொருள் என்று சொல்லும்போது நாம் இன்றைக்கு விஞ்ஞானம் காட்டுகின்ற ஆட்டம் (atom) இருக்கிறதே, அது என்று கருதாமல் அதனையும் உளப்படுத்தியிருக்கின்ற அடிப்படைப் பொருள் (basic material) என்று கருதிக் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையான பொருள்கள் பல்வேறு தன்மையில் பல்வேறு அளவையில் கூடுகின்றன. அப்படிக் கூடும்பொழுது பல்வேறு வடிவுபெற்ற பொருள்களாகப் பரிணமிக் கின்றன. பரிணமிக்கின்ற பொருள்கள் உயிரற்ற ஜடப் பொருள்களாகவும், நீங்கள் நினைக்கின்ற உயிருள்ள பொருள்களாகவும் பரிணமிக்கின்றன. ஜடப் பொருள் களாக இருக்கும்பொழுது அவற்றிற்குச் சில இயல்புகள் உண்டாகின்றன. உதாரணமாக, இந்தத் தரை இருக்கிறது. அதற்கென்று ஒரு வடிவம், உருவம் கொடுக்கப்படும் போது வேறு சில இயல்புகள் தோன்றுகின்றன. உயிருள்ள பொருள்களாக மாறும் பொழுது அதற்கென்று சில இயல்புகளும் வருகின்றன.

  • வெகு தூரத்தில் இருக்கின்ற அண்டங்கள் என்று சொல்லுகின்றோமே, பிற அண்டங்கள் எல்லாம் சேர்த்துத்தான் பிரபஞ்சம் என்று சொல்லுகின்றோம். அதற்கு மேல் ஏதாவது இருந்தால், அதையும் சேர்த்துக் கொள்ளட்டும்.

is.&T.sf.-9