பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அ.ச. ஞானசம்பந்தன் இனி, உயிருள்ள பொருள்களாக மாறும் பொழுது அவற்றின் அடிப்படையிலும் ஜடப் பொருள் களுக்கு உள்ள இயல்புகள்தாம் இருக்கின்றன. உண்மை யான கருத்துக்கள், எண்ணங்கள் என்று சொல்லு கின்றீர்களே, அவைகளும் உண்மையானவைகள் அல்ல. இந்த ஜடப் பொருளாகிய மேட்டர் (matter) இருக்கின்றதே, அதற்கு உரிய இயல்புதான். கருத்துக்கள் முதலியவையும் அவை முன்னே காணுகின்ற இயல்புகள், காண முடியாத இயல்புகள் என்ற அளவில் உலகத்தில் எதுவுமே இல்லை. ஜடப் பொருள்களின் கூட்டம், ஜடப் பொருள்களின் இயக்கம், ஜடப் பொருள்களின் இயல்பு என்று உலகாயதார்கள் இவ்வாறு மிக எளிதாக கூறி முடித்து விட்டார்கள். இந்தச் சுலபமான முடிவில் சார்புக் Glåståropäujib (theory of relativity) GlåstååTG Gusići, சேர்த்துவிட்டு, காலத் தத்துவத்தையும் அதில் ஏற்றிப் பார்த்து அதுவும் அதற்கு இயல்பு என்று சொல்லுகின்ற அளவில் அவர்களுடைய உலகாயதம் வளர்ந்திருக் கின்றது. - இனி, இவையெல்லாம் முதற்சொற்பொழிவில் சொன்னோமே, அந்த மின்சாரம் கண்ட விஞ்ஞானி கள் பேசுவதுபோலும் என்று நம்முடைய நாட்டு அன்பர்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இனி, பக்திமான்கள் - அதாவது பிரசாதம் கண்டவர் கள் - பேசுகின்ற பேச்சை அடுத்தபடியாகப் பார்க்கப் போகிறோம். அது ஆன்மிகம் (spiritualism) எனப் பெறும். ஆன்மா என்று நினைத்தவுடனேயே ஒரு கிளுகிளுப்பும் உணர்ச்சியும் தோன்றுகிறது. ஆன் மிகத்தைப் பற்றிச் சிந்திக்கிறவர்களுக்கு அல்லாதவர் களைப் பற்றிய பேச்சே இல்லை. இந்த நாட்டில் -