பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 117 அதாவது கீழை நாட்டில் - தோன்றுகின்ற சமயங்களைப் பற்றிச் சொன்னேனே, அவற்றினுள்ளே இரண்டே இரண்டு முக்கியமான சமயங்களை எடுத்துக் கொள்கிறேன். புத்த சமயம் ஒன்று. நம்முடைய இந்து சமயம் என்று சொல்லப்படுகின்ற ஒன்று. இந்து சமயம் என்று சொல்லப்படுகின்ற - என்று கூறப்படுகிற அதற்கென்று ஒரு வடிவம் கிடையாது. இதுதான் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இதனைத் தோற்றுவித்தவர் யாரென்றும் கூற முடியாது) இந்து சமயம் என்பதற்கு வேதத்திலிருந்து நேற்று முன்தினம் காலையில் வந்து 'ஓம் சக்தி பாடிய பாரதி வரை உள்ள அத்தனை பேரும் எத்தனையோ விதமான விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அவைகளெல்லாம் ஒரளவு உண்மையே தவிர, முற்ற முடிந்த உண்மையாகா. புத்த சமயத்தைப் பொறுத்த மட்டில் புத்தர் பல கொள்கைகளை வகுத்தார். அதற்குப் பின்னர் ஹlனயானம், மஹாயானம் எனப் பிளவுபட்டாலும் அடிப்படையில் புத்தருடைய சமயத்தை எடுத்துக்கொண்டோமேயானால் அது ஒரு வரலாறாகும். ஜடப்பொருள்களைப் பற்றி உலகாயத வாதிகள் எப்படி ஆராய்ந்தார்களோ அப்படியே பெளத்தர்களும் ஆராய்ந்தார்கள். அதற்குமேல் புத்தர் போன ஒரு படி என்னவென்றால், ஜடப்பொருளின் இயல்பு வகையில் ஆன்மாவினுடைய இயல்பு இது "என்ற அளவிற்கு ஒன்றைச் சொன்னதுதான். ஆன்மாவினுடைய இயல்பு என்று சிலவற்றைக் கூறினாரே தவிர, ஆன்மாவிற்கு மேற்பட்ட பரம் பொருள் என்ற ஒன்று இருக்கின்றதா என்றால், அதற்குப் புத்தன் வாயே திறக்கவில்லை. புத்தனுடைய சீடன் ஆனந்தன், பிம்பிசாரனிடம் போய்ப்