பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 0 அ.ச. ஞானசம்பந்தன் வந்து முடிக்கிறார் என்று சொன்னால், வியப்பாக இருக்கும். அறிவின் துணைகொண்டு ஓர் அளவுதான் ஆராய முடியும். அதற்குமேல் பொருளை அனுபவிக்க வேண்டுமானால், 'பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம், கோவிந்தம் பஜ மூடமதே என்று பாடும் உணர்வின் துணையினால்தான் முடியும். ஆகவே, நினைத்துப் பார்ப்போமேயானால், ளமையில் - எந்தப் பொருளைப் பார்த்தாலும், அந்தப் பொருளின் இயல்பு என்ன என்று ஆராய்கின்ற வயதில் - அனைவரும் அப்படித்தான் இருப்பர். அதனால் தவறு ஒன்றுமில்லை. ஆனால், ஒருநிலை வரும்பொழுது இந்த ஆராய்ச்சியில் பொழுதைக் கழிப்பதைவிட அனுபவிக்க வேண்டும் என்ற நிலை வருகிறது. அத்தகைய ஒருநிலை எல்லோருடைய வாழ்விலும் வருகிறது. சிலருக்கு இளமையில் இந்நிலை கிட்டலாம். சிலருக்கு முதுமையிலே கிட்டலாம். சிலருக்குப் பல பிறவியிலும் கிட்டாமலும் இருக்கலாம் என்பதை மறந்துவிடாதீர்கள். கீதைக்காரன் கரும யோகம், ஞானயோகம் என்று பல யோகங்களைச் சொல்கிறான். அவற்றைக் கேட்ட காண்டீபன், இப்படிப் பல யோகங்களைச் சொல்வதானால், ஒரு மனிதனுடைய பிறப்பு முடியுமுன் இவற்றைக் கடைப் பிடிக்க முடியாதே கண்ணா... என்னுடைய முடிவுதான் என்ன? என்றான். அதைப்பற்றி ஒன்றுமே கவலைப்படாதே. எந்த நிலையில் போய் முடிகின்றாயோ அங்கிருந்து அடுத்த பிறவியில் தொடரலாம் என்றான் கண்ணன். அதை மனத்தில் வாங்கிக் கொள்வோமேயானால் ஒருநிலை வரும் பொழுது அனுபவத்தைப் பற்றிச் சிந்திக்க முடிகின்றது. அந்த அனுபவத்தைத்தான் புத்தன் பேசுகின்றான். அனுபவமாகிய ஒன்று (மெடிட்டேஷன் என்ற