பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 123 பெயரிலே சொல்லப்பட்டாலும் எக்ஸ்பீரியன்ஸ் என்ற நிலையில் சொல்லப்பட்டாலும் சரி) எவ்வாறு பிறக்கிறது? பொருளைப் பார்க்கின்ற பொழுதும், அது நம்மோடு உறவாடும்பொழுதும், மோதும்பொழுதும் இரண்டு வகையில் நாம் எதிரொலிக்கின்றோம். நாம் பொருளை அனுபவிக்கின்றோம். இந்த நிலைதான் நாம், பொருள், அனுபவம் என்ற மூன்று அற்ற நிலை, இன்னும் சிலர் பொருளை அனுபவிக்கின் றார்கள். ஓர் உதாரணம் சொன்னால் விளங்கிக் கொள்ள முடியும். திருவாசகத்தைப் பற்றிப் பாடுகிறார் வள்ளலார். 'மணிவாசகப் பெருமானே, உம்முடைய திருவாசகத்தை நான் பாடுகின்றபொழுது நற்கருப்பஞ் சாற்றினிலே, தேன் கலந்து, பால் கலந்து செழுங்கனித் தீஞ்சுவை கலந்து ஊன் கலந்து என் உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே என்று பாடுகின்றார். திருவாசகத்தை என்னுடைய சிறிய வயதிலிருந்தே படித்தேன். ஆனால் ஒருநாள்கூடத் தேனும் பாலும் போலச் சுவைக்கவில்லை. ஆகவே, அடிப்படை எங்கே உளது? திருவாசகத்தைச் சொல்லுகின்றபொழுது நான் கலந்து பாடவேண்டும். படிக்கின்ற நான், படிக்கப் படுகின்ற திருவாசகம், படித்தலாகிய செயல் மூன்று இருக்கின்றவரை நான் வேறுதான் திருவாசகம் வேறுதான். நடுவிலே சப்தம்தான் வரும். ஆனால், நான் என்ற பொருள் திருவாசகத்தில் கரைந்துவிடுமே யானால் தேன் கலந்து, பால் கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்தது போன்ற இன்பம் தரும். இதனைத்தான் தியானம் (meditation) என்று சொன்னார்கள். இந்த நாட்டுக்காரன் தியானம் என்று சொல்லும்பொழுது, புறத்தில் செல்லுகின்ற பொறி புலன்களையெல்லாம் அடக்கு, அடக்கு என்றுகூடச் சொல்லுவதில்லை. அடங்கு என்றுதான் சொல்லு