பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 137 வாதிகளால் வளர்க்கப்பட்ட சமயம் வேறு; ஆன்மிக வாதிகள் வளர்த்த சமயம் வேறு. அது போலத்தான் இந்த நாட்டுச் சமயத்திலும், புத்த தேவன் சொன்ன அடிப்படைக் கொள்கைகளே இல்லாமல் அதன்மேல் போலிச் சம்பிரதாயம் போன்ற குப்பை மூடி விட்டது. அதுபோலத்தான் இந்து சமயமாகட்டும், மற்ற எந்தச் சமயமாகட்டும், அவைகளின் அடிப்படைக் கொள்கைகள் மிக எளிமையானவை; யாவரும் பின்பற்றக் கூடியவை. 'அறிவே இல்லாத மக்களி லிருந்து பெரிய ஐன்ஸ்டீன்வரை புரிந்து கொள்ளும் முறையில் எவ்வளவு எளிமையாக ஏசுநாதர் உபதேசம் செய்தார்!’ என்று டாக்டர் இராதாகிருஷ்ணன் மிக அழகாகச் சொன்னார். ஆன்மிகவாதி எல்லா உயிரையும் தன் உயிர்போலக் கருதுவான். பிறருக்குத் துன்பம் செய்யக்கூடாது, பிறர் வாழ்வதற்காகத் தன்னைத் தியாகம் செய்ய வேண்டும், சத்தியவானாக இருத்தல் வேண்டும், சத்தியமான கொள்கையை உடையவனாக இருத்தல் வேண்டும். இது ஆன்மிக வாதியின் எளிய கட்டமைப்பு. - இந்த உண்மையான அடிப்படைக் கொள்கை களின்மேல் சம்பிரதாயங்கள், கோட்பாடுகள், சடங்கு கள் இவற்றையெல்லாம் ஏற்றி ஏற்றி உண்மைச் சமயம் - ஆன்மிகத்தின் அடிப்படையில் உள்ள சமயம் - மறைக்கப்பட்டது. ஆன்மிகத்தின்மேல் தோன்றிய சமயத்தில் சடங்குகளும், சம்பிரதாயங்களும் நாளா வட்டத்தில் ஆன்மிகத்தையும், சமயத்தையும் ஒழித்து விட்டுத் தாம் மட்டுமே எஞ்சின. இந்தச் சடங்குகளையே சமயம் என்று கருதியும் ஆன்மிகம் என்று கருதியும் நம்முடைய இளைஞர்களும், பெரியவர்களும் ஆன்மிகத்தையும் சமயத்தையும்