பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் 151 என்று பேசுகின்றார். அந்த மரபிலே வந்தவர் ஆகையால் வள்ளல் பெருமானும் இந்தப் பகைவர்கள் பற்றிடாமல் வந்து அருள்வாய் என்று பேசுகின்றார். இத்துணைபேரையும் ஒருசேர நின்று தானாகவே வெல்வது என்பது இயலாத காரியம். இந்தக் கருத்தும் நம்முடைய நாட்டைப் பொறுத்த மட்டில் பலர் அருளிய கருத்துத்தான். 'அவனருளாலே அவன் தாள் வணங்கி என்று பாடுவதுபோல இப்போது இறைவனைப் பார்த்து, இக் கொடியவர்கள் என்னிடம் வாராமல் அருள்புரிய வேண்டும் என்று கேட்கின்றார். அப்படியானால் எதிர்மறை என்று சொல் கிறோமே நெகேஷன் இவை எல்லாம் கூடாது என்று சொல்லிவிட்டுப் போனால் அது சிறப்புடையது ஆகாது. எனவே இந்தக் கொடியவர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு, உள்ளே வரக்கூடியவர்கள் யார் யார் என்றும் பேசுகின்றார். நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு நிகழ்சாந்த மாம்புதல்வனும் * நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும் மருள்நீக்கும் அறிவாம் துணைவனும் மலைவறு நிராங்கார நண்பனும் கத்தமுறு மனம் என்னும் நல்ஏவலும் வருசகல கேவலம்இ லாதஇட மும்பெற்று வாழ்கின்ற வாழ்வருளுவாய் எனவே ஒருசிலவற்றை உள்ளத்தைவிட்டு வெளியே எடுக்க வேண்டுமென்று பேசிய பெருமானார், இப்போது என்னென்ன, எவரெவர்களெல்லாம் உள்ளே வரவேண்டுமென்று நினைக்கின்றார்.