பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 அ.ச. ஞானசம்பந்தன் சொல்லுவான் 'இராமா, உன்னுடைய திருவடி இங்கே காணப் பெறுகின்றது. ஒன்றினோடு ஒன்று ஒவ்வா. பூதங்கள் தொறும் உறைந்தால் அவை உன்னைப் பொறுக்குமோ இப்படி முரண்பாட்டினிடையே முழு முதலைக் காணுகின்ற இயல்பு இந்தத் தமிழர்களைப் பொறுத்த மட்டில் மிக நீண்டகாலமாக இருந்து வருகிறது. ஆதலால் அந்த முரண்பாட்டைச் சொல்லியே இங்கு 'கணக்கில்லாக் கோலம் நீ காட்டினாய் என்று மணிவாசகப்பெருமான் பேசுவதை வள்ளல்பெருமான் இங்கே எதிரொலிக்கின்றார். சொல்நிறைந்த பொருளும்அதன் இலக்கியமும் ஆகித் துரியதடு விருந்தஅடித் துணைவருந்த நடந்து கொன்னிறைந்த இரவினிடை எழுந்தருளிக் கதவம் கொழுங்காப்பை அவிழ்வித்துக் கொடியேனை அழைத்து என்னிறைந்த ஒருபொருள்என் கையில்அளித் தருளி என்மகனே வாழ்கஎன எழில்திருவாய் மலர்ந்தாய் தன்னிறைந்த நின்கருணைத் தன்மையைஎன் புகல்வேன் தனிமன்றில் ஆனந்தத் தாண்டவஞ்செய் அரசே என மிக நுணுக்கமான கருத்தை மிக அற்புதமாகப் பாடுகிறார் வள்ளல்பெருமான் இங்கே. இறைவன் திருவருள் இருக்கிறதே, அது நாம் தேடிச் சென்று அடைகின்ற ஒன்று அன்று. எவ்வளவு சிறந்த முறையிலே நம்முடைய முயற்சி நடை பெற்றாலும் மனித முயற்சியினாலே திருவருளைப் பெறுவது என்பது இயலாத காரியம். இதனாலேதான் மணிவாசகப் பெருமான், அவனருளாலே அவன்தாள் வணங்கி