பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 அ.ச. ஞானசம்பந்தன்


தேவாரத் திருப்பதிகம் பாடத் தகுதியில்லையென்று கருதி, அவர்களுக்கெல்லாம் தீட்சை பண்ணி வைத்த பிறகுதான் தேவாரம் பாடவேண்டும் என்ற கருத்திலே அது வந்திருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.

இப்படி கல்வெட்டுகளை எல்லாம் படித்து - ஒன்பதாம் திருமுறையைப் பற்றி, சென்னை பல்கலைக் கழகத்தில் பேசுவதற்கு சிந்திக்கிறபோது எத்தனை கல்வெட்டுகள் ராஜராஜனுக்கு முன்னாலே தேவாரப் பதிகம் பாடுவதற்கு ஏற்பட்டன என்பதைக் காண முடிந்தது.

ராஜராஜனுக்கு நூற்றிச் சொச்சம் வருஷங்களுக்கு முன்னாலே - திருவல்லம் கல்வெட்டு - நந்திவர்மனது. தேவாரப் பதிகம் பாடுவார் உள்ளிட்ட என்றே தொடங்கி அவன் ஒரு நாற்பது பேருக்குப் பட்டியல் கொடுக்கிறான். இது கி. பி. 750ல்.

கி.பி. 873 இல் முதலாம் ஆதித்தனின் திருவெறும்பூர்க் கல்வெட்டு. கி.பி. 910 இல் முதலாம் பராந்தகனுடைய திருவாவடுதுறைக் கல்வெட்டு. கி.பி. 941இல் எங்கள் ஊராகிய லால்குடி - திருத்தவத்துறைக் கல்வெட்டு. கி.பி. 977 இல் உத்தமசோழன் கோனேரி ராஜபுரம் என்று இன்று வழங்குகிறதே திருவல்லம் - அந்தக் கல்வெட்டு.

ஆக ராஜராஜன் வருவதற்கு முன்னாலே ஐந்து பேர் தேவாரப் பதிகம் பாடுகிறவர்கள் பட்டியல் கொடுத்து, அவர்களுக்கு நிபந்தம் விட்டிருக்கிறார்கள். இதில் என்ன வேடிக்கை, அந்த ஐந்துபேருக்கும் தீட்சா நாமம் கொடுக்கவில்லை.

முதன் முதலாக ராஜராஜன்தான் தீட்சா நாமம் கொடுத்தான். இது ஏன் என்ற யோசனை தோன்றியது எனக்கு இவனுடைய குரு சதுரானன