பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சித்தர்கள் 13


பண்டிதன் என்பவர். இவனுடைய மகனாகிய ராஜேந்திரனுடைய குரு லகுலீச பண்டிதன் என்பவர். இந்த லகுலீச பண்டிதனோ, சதுரானன பண்டிதனோ நம் ஊர்க்காரனோ சைவனோ அல்லன். இவர்கள் அங்கேயிருந்து வந்த காளாமுகச் சைவர்கள். இந்தக் காளமுகச் சைவர்களைக் குருவாகக் கொண்டிருக்கிற ஒருவன் எப்படி இங்கிருக்கிற தேவாரங்களுக்கு மதிப்புக் கொடுக்க முடியுமென்ற சிந்தனை தோன்ற ஆரம்பித்தது.

'உண்மை என்னவென்றால் இவர்களுக்கு முன்னாலே இத்தனைபேர் தேவாரப் பதிகம் பாடியவர்களுக்குக் கல்வெட்டுப் போட்டிருந்தார்கள் என்றால் தேவாரத்தை யாரும் புதிதாகக் கண்டுபிடிக்க வில்லை. அது என்றைக்கும் இருந்துகொண்டுதான் இருக்கிறது.

அப்படியிருக்க திருமுறை கண்ட புராணம் என்ற ஒன்றே ஒன்று தொங்குகிறது. எனது தந்தையார் பெரியபுராணம் பல பிரதிகள் சேர்ப்பதில் சூரர். ஆறுமுக நாவலர் பதிப்பித்த பெரியபுராணத்திலே திருமுறைகண்ட புராணம் என்று எழுதி, ஒரு நட்சத்திரக் குறிபோட்டு அடியில் இதை இயற்றியவர் இன்னார் என்று தெரியவில்லை, உமாபதி சிவம் என்று சிலர் கூறுவர் என்று இருக்கிறது. அடுத்த பதிப்பு போடும்போது ஆறுமுகநாவலர் காலமாகிவிட்டார். இங்கே இருக்கிற உமாபதி சிவத்தை மேலேபோட்டு, நட்சத்திரக் குறியீட்டை எடுத்துவிட்டார்கள். அதையே நம்பிக் கொண்டு கொற்றவன்குடி உமாபதி சிவம்' எழுதியது, அதை எப்படி ஐயா மறுக்க முடியும்? என இவர்கள் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். உமாபதி