பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18 அ.ச. ஞானசம்பந்தன்


பழனி இருக்கிறது. திருப்பதி இருக்கிறது. எங்கள் ஊரிலே மாங்காடு இருக்கிறது.

இங்கெல்லாம் சித்தர்கள் தங்கி வாழ்ந்து அங்குள்ள மூர்த்தங்களுக்கு ஆற்றல் கொடுக்கிறார்கள். விக்கிரகம் இருக்கிறதே அது மின்விளக்கு போல. அது எரிவதனாலே ஆற்றல் எங்கே இருக்கிறது என்று யாரும் கவனிக்கிறது இல்லை. சித்தர்கள் அங்கே தங்கி ஆற்றல் கொடுக்கிறார்கள்.

ஆக இந்தக் கோயில்கள் எப்படித் தோன்றுகின்றன என்றால் யாராவது ஒருத்தர் அதற்குச் சக்தி ஏற்ற வேண்டும். அந்தச் சக்தி மெல் அதிர்வுகளாக நின்றுவிடும். இப்படி சக்தி கூடி பாடல்பெற்ற கோயில்களுக்குப் போனார்களே தவிர சோழர்கள் கட்டிய மாபெரும் கோவில்களுக்கு யாரும் போகத் தயாராயில்லை.

அந்த நிலைமையிலே கருவூர்த்தேவர், சேந்தனார் முதலிய சித்தர்கள், இந்தச் சோழர்களுடைய சைவப்பற்றை வைத்துக்கொண்டு மக்களை வழி திருப்ப வேண்டுமென்றால் ஒரேவழி - இனிமேல் த்ரைலோக்கிய சுந்தரத்துக்கும், ராஜராஜேச்வரத் துக்கும் ஞானசம்பந்தரைக் கூட்டி வந்து பாடல் பெற முடியாது. காலம் கடந்து போனது - எனவே இவர்களே பாடினார்கள். அதுதான் சமாசாரம்.

திருவிசைப்பா என்பது சோழர் காலத்திலே தோற்றுவிக்கப்பட்ட கோவில்களுக்கு ஒரு ப்ராதான்யம் கொடுப்பதற்காக கருவூர்த் தேவர், சேந்தனார், அமுதனார் முதலியவர்கள் பாடினார்கள். அப்படிப் பாடும்போது இந்தக் கோயிலை மட்டும் பாடினால் பயனில்லை. சிதம்பரம் எல்லாவற்றுக்கும் மூல ஸ்தானம். அதையும் பாடினார்கள். பெரும்