பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 19


பாலான சோழர்கள் கட்டிய கோயிலை வைத்துப் பாடின சிறப்பு இவர்களுடையது. இவர்கள் சித்தர்கள். இவர்கள் பாடலுக்கு ஆற்றல் உண்டு. இந்தப் பாடல் பெற்றதனாலே இந்தக் கோயில்களுக்கும் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் போக ஆரம்பித்தார்கள். இது இத்தனையும் நிகழ்ச்சி முறை. இதன் அடிப்படையைச் சிந்திக்கும்போது ஒரு பெரிய போராட்டம். ராஜராஜன் ஒன்றும் செய்துவிடவில்லை பக்தி இலக்கிய காலத்திலே என்ன போராட்டம் என்பதைச் சுருக்கமாகச் சொன்னேன்.

வேதம் பற்றிய பேச்சு வருகிறது. ஆனால் வேதத்திலே சிவனுக்கு ஒன்றும் இடம் கிடையாது. அப்படியிருக்க எப்படி இந்த வளர்ச்சி ஏற்பட்டது எனபது.

களப்பிரர்கள் கொலைக்கஞ்சாப் பாதகர்கள் என்பதிலே சந்தேகம் இல்லை. ஆனால் என்ன உபகாரம் செய்தார்கள்? இந்தத் தமிழ்ர்களைத் தட்டி எழுப்பினார்கள். அதுதான். ஷாக் ட்ரீட்மெண்டு' என்று சொல்கிறோமே அதிர்ச்சி தருகின்ற வைத்தியம் - அந்த வைத்தியத்தின் பயனாகத்தான் பக்தி இலக்கியம் தோன்றிற்று. பக்தி இலக்கியத்தைத் தோற்று வித்தவர்கள் என்ன செய்தார்கள்? மக்களை மனம் திருப்புவதற்கு ஒரு வழி வகுத்தார்கள்.

தமிழகத்தை களப்பிரர்கள் விட்டுவிட்டுப் போகிற காலத்தில் வடமொழி இங்கு சிறப்புப் பெற்றிருந்ததே தவிர தமிழுக்கு இடம் கிடையாது. ஆகவே 4196 பாடல்கள் பாடிய ஞானசம்பந்தர் 147 இடத்திலே தன்னை தமிழ்ஞான சம்பந்தன், 'முத்தமிழ் விரகன், என்று. சொல்லிக்கொள்ளும்படியாக ஆயிற்று. அடித்துப் பேசி தன்னைத் தமிழோடு சேர்த்துச்