பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 21

 செந்தமிழர் உள்ளே போய் அர்ச்சனை செய்தார்கள் என்பதுதானே அர்த்தம். இவன் போய் நேரடியாக அர்ச்சனை பண்ணுகிற பழக்கம் இந்த நாட்டிலே இருந்தது. இதற்குமேலே சுந்தரர் வருகிறார்.

இயக்கர் கின்னரர் யமனொடு வருணர்
இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல்புலி வானரம் நாகம்
வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயிர்ப்பொன் றின்றிநின் திருவடி யதனை
அர்ச்சித் தார்

இந்த பட்டியலில் புலி, சிங்கம் நாகத்தோடு எல்லாவற்றையும் கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்.

இனி சிவவாக்கியர் மட்டுமல்ல, பாம்பாட்டிச் சித்தர் பாடுவார்.

"சமயபேதம் பலவான சாதி பேதங்கள்
சகத்தோர்க்கே... ' என்பார்.
“சாதிப் பிரிவினிலே தீயை மூட்டுவோம்"

என்று. அதனால் இவற்றையெல்லாம் தனித்தனியாகப் பேசப் போகிறாயா என்று பேசுவார் கொங்கணச் சித்தர்.

“சாதி பேதங்கள் சொல்லுகி றீர்தெய்வம்
தானென் றொருவுடல் பேதமுண்டோ?
ஒதிய பாலதி லொன்றாகி யதிலே
உற்பத்தி நெய்தயிர் மோராச்சு"

ஆக சாதிகளை அடித்து நொறுக்க வேண்டுமென்பது இவர்களுடைய முதலாவது கொள்கை.