பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 35


காதலாகி கசிந்து கண்ணிர் மல்கி ஓதுவார் என்று சொன்னால், பத்துகோடி தடவை எழுதினால் என்ன? ஒரு லட்சம் தடவை எழுதினால் என்ன? அதைத்தான் இங்கே சொல்கிறார்.

ஆடியா டியகம் கரைந்துஇசை
பாடிப்பாடிக் கண்ணிர் மல்கி எங்கும்
நாடிநா டிநரசிங்கா வென்று, வாடும்

என்று ஆழ்வார் பெருமானும் பாடுவார். அகம் கரைந்து நாடி நாடி நரசிங்கா என்று சொல்லணுமே தவிர யாரோ ஒருத்தன் பேரை வச்சுகிட்டு தினம் கூப்பிடுவதனாலே ஒரு பிரயோசனமும் இல்லை. இதைத்தான் வெட்ட வெளிச்சமாகப் பாடுகிறவர்கள் சித்தர்கள்.

உருக்கி நெஞ்சை உள்கலந்து உண்மைசுற வல்லிரேல்
சுருக்கமற்ற சோதியைத் தொடர்ந்து கூடல் ஆகுமே

என்று.

இனி வாலைச்சாமி என்ற ஒரு சித்தர்

தத்துவக் குப்பையைத் தள்ளுங்கடி வேத
சாத்திரப் பொத்தலை மூடுங்கடி
முத்தி பெற ஞான வஸ்து வரக்கண்டு
மூட்டிக் கும்மியடி

ஆக இது பல சமயங்களிலே வெறும் குப்பையாகி விட்டது. அதன் தத்துவங்களும், பொருளும் மறைந்து விட்ட நிலையிலே, ஏன் இது என்று அறிய முடியாத நிலையிலே வெறும் பாரமாகப் போய்விட்டதனாலே அதை ஒதுக்கிவிடுங்கள் என்று