பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 ல் அ.ச. ஞானசம்பந்தன்


பேசுவதற்குரிய காரணம் உலகத்திற்கு அவர்களுடைய சேவை தேவைப்படுகிறது. ஆகையினாலே அங்கங்கே இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள். பலசமயங்களிலே நமக்கு அது தெரிவதில்லை. அவ்வளவுதான்.

உதாரணமாகப் பழனி, திருப்பதி முதலிய பெரிய கூேத்திரங்களை எடுத்துக் கொள்ளுங்கள். பழனியிலே உள்ள ஆண்டவனது வடிவத்திற்கும் மற்ற இடங்களிலே உள்ள ஆண்டவனுடைய வடிவத்திற்கும் வேறுபாடு உண்டா? நிச்சயமாக இருக்க முடியாது. அப்படியிருக்க ஒரே ஆண்டவன் பழனியிலே ஏன் அவ்வளவு சாந்நித்யத்துடன் விளங்க வேண்டும்? திருப்பதியிலே - அது பெருமாளா, அன்னையா? முருகனா - அந்த ஆராய்ச்சி அப்புறம் இருக்கட்டும். அங்கேயிருக்கிற வடிவு ஏனைய கோவில்களிலே இருக்கிற வடிவு போன்றதுதானே. அந்த வடிவு ஏனைய கோவில்களிலே இருக்கிற வடிவுதான் என்றால் அந்த இடத்திலே ஏன் இவ்வளவு சாந்தித்யம் இருக்க வேண்டும்? சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பழனிக்குப் போகிறவர்கள் ஆயிரம்பேர் என்றால் 999 பேருக்கு 'போகரை'ப் பற்றித் தெரியாது. திருப்பதிக்கு பதினாறாயிரம் பேர் போகிறார்கள் என்றால் ஒரு சிலருக்குக் கூட 'கோரக்கரை'ப்பற்றித் தெரியாது. திருச்செந்துளருக்கு ஆயிரம் பேர் போகிறார்கள் என்றால் 'பஞ்ச சித்தர்களைப்' பற்றி யாருக்குமே தெரியாது. இந்தத் திருப்பதியில் இருக்கிற வடிவம், பழனியில் இருக்கிற வடிவம், திருச்செந்தூரில் இருக்கிற வடிவம் இவை யாவும் பதினாயிரம் வால்ட் பல்பு என்பதை மறந்துவிடாதீர்கள். இந்த விக்கிரகம்