பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சித்தர்கள் 45

சித்தர்கள் 45

எட்டு மலைகளைப் பந்தா எடுத்தெறி குவோம் மூண்டெழும் அக்கினிக்குள் மூழ்கி வருகுவோம் முந்நீருள் இருப்பினும் மூச்ச டக்குவோம் தாண்டிவரும் வன்புலியைத் தாக்கிவிடுவோம் செப்பரிய மூன்றுலகும் செம்பொன் னாக்குவோம் செங்கதிரைத் தண்கதிராய்ச் செய்து விடுவோம்

இது பலரும் அறிந்துகொள்ளக்கூடிய ஒன்றுதான். கலிலியோ கடலில் அன்பர்களுடன் படகில் போகும்போது புயல் வந்தது. அன்பர்கள் வருந்தினார்கள். ஏசு பெருமான் புயலைப் பார்த்து STOP என்று சொன்னார். நின்றுபோய்விட்டது என்று விவிலியத்தில் படிக்கிறோம்.

இங்கே ஆழ்வார்கள், நாயன்மார்கள் வரலாற்றிலே பார்க்கிறோம். 'கொள்ளம்புதுரர் வெள்ளத்தில் புகுந்து போனார்கள்’ என்று. இப்போதும் இவையெல்லாம் நடைபெறுகின்றன என்பதை ஒரிருவர் அறிய முடியும்.

முன்னே சொன்னபடி சித்தர்கள் பல்வேறு இடங்களிலும் இருக்கிறார்கள் என்றதுபோல சென்னையை அடுத்து 92 கிலோமீட்டர் துரத்தி லிருக்கிற மேல்மருவத்துரர் என்ற இடத்திலே ஒரு சித்தர் - ஒரு சித்தர் என்று சொல்வது தவறு - பல சித்தர்கள் வாழ்கிறார்கள்.

இந்த அச்சிறுப்பாக்கம், மருவத்துார், திருவண்ணாமலை இந்தப் பகுதியிலே நிரம்ப சித்தர்கள் அன்றும் இன்றும் இருந்து வருகிறார்கள் என்று தெரிகிறது. அங்கே ஒருவர் இதனைச் செய்து கொண்டிருக்கிறார் பலரும் காண, அற்புதங்கள் நடைபெறுகின்றன.