பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கிழக்கும் மேற்கும் 61

 ஊரில் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர் வரலாற்றில் வேண்டுமானால் டாக்டர் பட்டம் பெற முடியும். ஆனால், அங்கோ கீழைநாட்டுத் தத்துவத்தில் ஒரு டாக்டர் பட்டமும், ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் ஒரு டாக்டர் பட்டமும் பெற முடியும். அப்படிப்பட்ட ஒருவர் றிப்பியாக எங்கள் இல்லத்திற்கு வந்தார். வசதியான குடும்பத்தில் பிறந்தவர்; கற்றுமிருந்தார். அவர் நாடாகிய அமெரிக்க நாடோ பொருளாதாரத்தில் எவ்வளவோ முன்னேறியுள்ள நாடு; அணுகுண்டைக் கண்டுபிடித்த நாடு. ஒரு கோளைவிட்டு நிலாவிற்குத் தாவிச் செல்லும் நாடு. இருந்தாலும் மனம்நிறைவு பெறவில்லை. பாரதி பாடினானே, "பல கற்றும் பல கேட்டும் பயன் ஒன்றும் இல்லையடி முத்துமாரியம்மா” என்ற நிலையில் உள்ள இவர்களைப் பார்க்கும்போது எல்.எஸ்.டி. மாத்திரைதான் நினைவுக்கு வருகிறது. எல்.எஸ்.டி. மாத்திரை போடுகின்றவர்களும் மார்ஃபியா ஊசி போட்டுக் கொள்பவரும் மட்டமான இன்பம் கருதிச் செய்கின்றார்கள் என்று கருத வேண்டா. நூற்றுக்கு ஒருவர் அப்படி இருக்கலாம். ஆனால், நூற்றுக்குத் தொண்ணுாற்றொன்பது பேர் வாழ்க்கையில் அமைதி என்ற ஒன்றைக் காணாமையால் அதனை 'அடைவதற்கு வழி இதுதான் என்று நினைக்கிறார்கள். நாகரிகம் என்ற பெயரில் பலவற்றைக் கண்ட மேலை நாட்டவர் அமைதியை அடைய வழி தெரியாமல் எங்கெல்லாமோ ஓடுகின்றார்கள்.எல். எஸ். டி. (LSD) என்பது ஒரு மாத்திரை. அதை விழுங்கினால் பல மணி நேரம் இவ்வுலக நினைவில்லாமல் ஒரு கற்பனை உலகில் சஞ்சரிக்க முடியும். ஆனால், அது பேராபத்தை விளைவிக்கக் கூடியது.