பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
vi

 நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர் 'கல்லாத பேர்களே நல்லவர்கள் நல்லவர்கள் கற்றும் அறிவில்லாத என் கன்மத்தை என் சொல்லுவேன் (சித். 100) என்று நொந்து கொள்ளுகிறார். நம் காலத்தில் கவிச்சக்கரவர்த்தி பாரதி 'பல கற்றும் பல கேட்டும் - முத்து மாரியம்மா பயனொன்றும் இல்லையடி முத்து மாரியம்மா' என்பதோடு நிறுத்தாமல் 'தோல் வெளுக்க சாம்பல் உண்டு முத்து மாரியம்மா, துணி வெளுக்க மண்ணுண்டு முத்துமாரியம்மா, மணி வெளுக்கச் சாணையுண்டு முத்துமாரியம்மா, மனம் வெளுக்க வழியில்லையே முத்துமாரியம்மா' என்று நொந்து கொள்கிறார். இவையெல்லாம் எதைக் குறிக்கின்றன? புற வளர்ச்சி பெற்றுள்ள மனித சமுதாயம் அகவளர்ச்சி பெறவில்லை. நாம் பெறும் ஏட்டுக்கல்வி மனத்தையோ, பண்பாட்டையோ வளர்க்கவில்லை என்பதையே அறிவுறுத்துகிறது. இவற்றையெல்லாம் சிந்தித்த நம் முன்னோர் பலர் இதற்கொரு வழியைக் காண முனைந்தனர்.

பிளேட்டோ, சாக்ரடீஸ் போன்ற சமுதாய நல்வழி காட்டிகள். தனிமனிதனைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் சமுதாயத்தைத் திருத்துவதையே நோக்கமாகக் கொண்டனர். ஆனால் அவர்கள் வாழ்ந்த கிரேக்க சமுதாயம் என்ன நிலை அடைந்தது என்பதை வரலாறு காட்டுகிறது. இதன் மறுதலையாக தனி மனிதனை எடுத்துக்கொண்டு அவனைத் திருத்தினால் சமுதாயம் தானே திருந்தும் என்று அன்றே கண்டு அதற்குரிய வழி கோலினார் வள்ளுவப் பெருந்தகை. அறவாழ்க்கை என்ற பெயரில் பலவற்றைக் கூறும் பிறரைப் போலன்றி 'மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்' என்று கூறுவதோடு அமையாது 'ஆகுல நீர பிற' (தி.34) என்றும்