பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கிழக்கும் மேற்கும் 65


என்பதனை எல்லோரும் அறிதல் வேண்டும். இன்னும் வளர்ந்தால், இச் சொல் தோன்றும் மனநிலைக்கு அடிப்படையை ஆராயாது விட்டுவிட்டால் எதிர்காலம் குடிசைக்குத் தீயிட்டு மகிழும் மன நிலையைத்தான் கொண்டுவரும்.

வாழ்க்கையில் உயர்ந்த குறிக்கோள் இல்லாத காரணத்தால் பொருள்தேடுதல் போன்ற சாதாரண் சமாசாரங்கள் அவர்களின் வாழ்க்கையின் குறிக் கோள்களாக அமைந்துவிடுகின்றன. அவற்றை அடைந்து விட்டவுடன் வாழ்க்கையே ஒரு பெருந் துளைப்பாகப் போய்ச் சலிப்பு ஏற்பட்டுவிடுகின்றது. ஆகையினால், இந்த நாட்டுக்காரன் "உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்" (குறள்) என்று சொன்னான். ஆனால், மேலைநாடுகளில் வாழ்பவர்கள் பெரும் பான்மையினரின் குறிக்கோள் என்ன? பக்கத்து வீட்டுக்காரனைப்போல, முடிந்தால் அவனைவிட அதிகமாக முன்னேறுவதே வாழ்க்கையின் குறிக்கோள். நேற்றுவரை ஒன்றும் இல்லாதிருந்த பக்கத்து வீட்டுக் காரன் இன்று லட்சாதிபதியாகிவிட்டானே, அவனைப் பார்த்து நீயும் லட்சாதிபதியாகக் கூடாதா. “Look.What are you doing? Why don’t you do like him”. இதுதான் அவர்கள் நாகரிகம். அவர்களின் குறிக்கோள் லட்சாதிபதியாவதுதான். அந்த நிலையை அடைந்த பிறகு வாழ்வில் பெறக் கூடியது வேறு எதுவுமே இல்லையா என்ற சலிப்பு ஏற்பட்டு விடுகிறது. காரணம் வாழ்வில் குறிக்கோளற்றுப் போய்விட்டதேயாகும். எதனையாவது ஒன்றைப்பற்றி இரவு பகலாக எண்ணி எண்ணி மறுகுகின்ற மனம் அதனைப் பெற்று