பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் 71 ஆத்ம சக்தியாகிய பிரமம் என்று எண்ணினால் மரம் என்ற காட்சி போய்விடுகிறது. அதுவே பிரமம் ஆகிவிடுகிறது’. அதை இந்த நாட்டில் பலரும் ஓரளவுக்கு ஒத்துக் கொண்டார்கள். பெரிய செல்வர் வீட்டுக்குப் போகிறோம். நாய் இருக்கிறது. "ஓ! நாய்' என்று அஞ்சி அங்கு நின்றுவிட்டோம். கொஞ்ச நேரம் நின்று பார்க்கிறோம். அது குரைக்கவுமில்லை, வாலைக் குழைக்கவுமில்லை. மூச்சு விடுவதாகவும் தெரியவில்லை. பின்னர் முடிவுக்கு வருகிறோம். ஒ! 'இது கல்லால் செய்யப்பட்டது என்ற முடிவுக்கு வருகிறோம். முதலிலே பார்த்தபோது கல் அங்கே இல்லை. கல்லென்று தெரிந்த பிறகு நாய் இல்லை. இது நமது நாட்டில் சாதாரணப் பழமொழியாக வழங்கி வருகிறது. "நாயைக் கண்டால் கல்லைக் காணோம், கல்லைக் கண்டால் நாயைக் காணோம்'. திருமூலர் திருமந்திரத்தில் “மரத்தில் மறைந்தது மாமத யானை, மரத்தை மறைத்தது மாமத யானை” என்று கூறுகிறார். கோவிலில் உள்ள யானை வாகனத்தைப் பார்க்கின்ற போது யானையாகத் தெரியவில்லை. யானை என்ற காட்சியைப் பார்க்கும்போது மரம் தெரியவில்லை. இந்த அழகான எளிய உதாரணத்தைச் சொல்லிப் பெரிய உண்மையை விளக்குகின்றார். பரத்தில் மறைந்தது பார் முதல் பூதம் பரத்தை மறைத்தது பார் முதல் பூதம் இவ்வளவு விஸ்தாரமாக விரிந்து நிற்கின்ற பொருள் கள், இவைகளின் அடிப்படையில் இருக்கின்ற கடவுட் பொருளை மறைத்துவிட்டன. இது மைக், இது பேப்பர், இது மேஜை' என்று தனித்தனியே வேறுபடுத்திச் சொல்கிறேன். இவை அனைத்தின் அடிப்படையில் இருக்கின்ற மூலப் பொருளாகிய