பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் 73 இலக்கணங்கள் உண்டாகின்றன; அவ்வளவுதான். இந்தக் கொள்கையின் அடிப்படையில் தான் அந்த நாட்டுச் சமயம் வளர்ந்தது. பிறகு விஞ்ஞான அடிப்படைகள் மாறத் தொடங்கின. மாற்றத்தில் பழமை அடிபட்டவுடன் விஞ்ஞான அடிப்படையில் கட்டப்பட்ட சமயமும் மாறுகிறது. அந்தக் கொள்கைக்கு அசைவு என்றால் சமயத்திற்கும் அசைவுதானே? ஆகவே, பிளாட்டோ காணாத அறிவின் அடிப்படையில் எழுந்த தோமியக் கிறிஸ்தவ சமயம் அரிஸ்டாட்டிலின் அடிப்படை மாறி, பிறகு லாக்கேயின் அடிப்படையும் மாறி இவ்வாறு பெரு மாற்றத்திற்கு உள்ளாகிக் கொண்டே வந்து விட்டது. இன்றைக்கும் அவர்கள் சமயத்தில் உள்ள ஒரு பெரிய பிரச்சினை நாளாவட்டத்தில் காணுகிற விஞ்ஞானப் புதுமைகளோடு சேர்ந்து வைத்து வாழ்வைக் காண வேண்டும் என்பதாகும். ஒப்புமைக் கொள்கை கண்டு ஜெனரல் @uffi#Guli (General Theory of Relativity) LurrGLILI – ஐன்ஸ்டீன் என்ற அந்தப் பெருமகன் அதனோடு திருப்தி அடையவில்லை. அணு முதல் அண்டம் வரை ஒரே சட்டத்தின் கீழ்க் கொண்டு வர வேண்டும் என்று நினைத்தார். ஐன்ஸ்டீனின் விஞ்ஞானத்துக்கு மட்டு மல்ல, அந்த நாட்டிலிருக்கும் சமயவாதிக்கும் அதே கொள்கைதான். மேலை நாட்டவர் மக்கள் வாழ்க்கை, விஞ்ஞான நுண்மைகள், வாழ்க்கை முன்னேற்றம் பொருளாதாரச் சிறப்புமுறை இத்தனையையும் சேர்த்து ஒரே தத்துவத்தில் அடக்க வேண்டும் என்ற முயற்சி உடையவர்கள். இதனால்தான் அவர்களின் சமயம் நாளுக்கு நாள், நாளுக்கு நாள் மாறிக் கொண்டே வந்தது. ஒரே கிறிஸ்தவ சமயம்தான்