பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் 77 தமது வீடு மிகவும் சிறியது என்றும், அந்த வீட்டிலும் தான் மிகவும் சிறியன் என்றும் எண்ணுவாராம். "சே! என் அகங்காரம் அழிந்தது; இனி உள்ளே போகலாம்" என்று வீட்டினுள் போய்விடுவாராம். ஆஸ்போனும், ஐன்ஸ்டீனும் விஞ்ஞானிகள்! இந்த நாட்டில் சிலர், 'பக்திமான் கண்டது பிரசாதம்’ என்று கூறுகிறார்களே அவனை நோக்கித்தான் 'மின்சாரம் கண்ட விஞ்ஞானியும்' வருகிறான் என்பதனை நினைவுபடுத்துகின்றேன். ஆகவேதான், இவர்கள் இந்தத் தியான முறையைப் பெரிதும் போற்றினர். பெரிய தொலைநோக்கியோ மைக்கிராஸ்கோப்போ, ஒன்றுமில்லாத காலத்திலேயே உட்கார்ந்த இடத்திலிருந்தே பலப்பல பெரும்பெரும் விஞ்ஞான உண்மைகளைக் கண்டு கூறிவிட்டுப் போயிருந்தார்கள் இந் நாட்டவர்கள். இவர்கள் பேசிவிட்டுப் போன புதுமையிலிருந்தே வெறும் தியானமூலம் எவ்வளவு காரியங்களைச் சாதிக்க முடியும் என்பது தெரியவருகிறது. மேலைநாட்டு விஞ்ஞானிகளும் இதே முறையில்தான் கொள்கைகள் சிலவற்றை வகுத்துக் கொடுக்கிறார்கள். நியூட்டன் கண்டுபிடித்த இயக்க விதிகள் மூன்றினையும் சோதனை செய்து கண்டறிந்தார்கள். நியூட்டனோ எனில் அவற்றைக் கொள்கையளவிலே கண்டார். விஞ்ஞானமும் அப்படித்தான். ஆழ்ந்த சிந்தனை அல்லது தியானத்தின் மூலமாகத்தான் விஞ்ஞான வளர்ச்சி ஏற்படுகிறது. விஞ்ஞானி யாகட்டும், ஞானியாகட்டும் மனத்தை ஒருமுகப் படுத்தி ஒருமுகப்படுத்திப் பொருளை ஆராயத் தொடங்கியவுடன் உண்மைகள் பளிச்சிடுகின்றன. காகிதத்தையும், பென்சிலையும் வைத்துக் கொண்டு