பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 அ.ச. ஞானசம்பந்தன் தான் புளூட்டோ என்ற கோள் குறிப்பிட்ட ஓர் இடத்தில் மறைந்து உள்ளது என்ற உண்மையை உணர்ந்து கூறினார் விஞ்ஞானியாகிய ஐன்ஸ்டீன். அவர் ஆகாயத்தை அண்ணாந்துகூடப் பார்த்திருக்க மாட்டார். எல்லாவற்றையும் காகிதத்திலேயே எழுதிப் பார்த்தார். ஆகவே மனத்தை ஒருமுகப் படுத்தி அறிவை அதன் வழியில் செலுத்துவதினால் காணக் கூடிய பல புதுமைகளை இன்னுஞ் சிலர் மனத்தைப் பலமுகப்படுத்திக் கருவிகளின் உதவியினால் காணுகின்றார்கள். ஆக, மேனாட்டு விஞ்ஞானிகள் பலரும் கருவிகள்மூலம் காண்பதைப் பெரிதாக எண்ணி நம்பிக்கை வைத்தார்கள். இந்நாட்டு ஞானிகள் தியானத்தில் பெரிதாக நம்பிக்கை வைத்தார்கள். மேலைநாட்டார் விஞ்ஞானப் புதுமை களில் நம்பிக்கை வைத்ததால் அந்த அடிப்படையில் தோன்றிய வாழ்வு முறையும் மாறத் தொடங்கி ஹியூ டால்ட்டன் உடைக்க முடியாதது என்று தானே "ஆட்டம்" (atom - உடைக்க முடியாதது) என்று பெயர் வைத்தார். 'ஆட்டம் என்ற அந்த நிலை மாறி 'உடைக்கக் கூடியது' என்ற நிலை வந்து, அந்த அணுவிலிருந்து எலக்ட்ரான், புரோட்டான், பாசிட்ரான், மீசான் முதலிய பல சக்திகள் வெளி வந்து கொண்டே உள்ளன என்றாலும், அறிவின் அடிப் படையிலே செல்லும் அவர்கள் முன்னர் இதனைத் தவறாகக் கருதியதற்காக வெட்கப்படுவதில்லை. அப்படியே ஏற்றுக் கொள்கின்றனர். உண்மை தெரியத் தெரிய பழைய கருத்துக்கள் மாறிக் கொண்டே வருகின்றன. இந்த நாட்டுக்காரர்கள் இந்த விஞ்ஞான அடிப்படையில் வாழ்வும் சமயமும் கட்டப்பட்டால் விஞ்ஞானம் மாறும்பொழுதெல்லாம் இது மாறுகின்ற