பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் 79 நிலைமை ஏற்படும் என்று கருதினார்கள். எனவே, அது வேண்டாம் என்று விட்டு விட்டனர். மனிதனுடைய அறிவை விட்டு அவனுடைய உணர்வு உலகம் என்ற ஒன்று இருக்கின்றதல்லவா, அதற்கு ஒரு பொதுத் தன்மை உண்டு. எந்த இடத்திலும், எந்தக் காலத்திலும் மாறாத பொது இயல்புடையது உணர்வு உலகம். அந்த உணர்வை அடிப்படையாகக் கொண்டுதான் இவர்கள் வாழ்வை வளர்த்துவிட்டார்கள். ஆகையினால்தான் கீழை நாட்டில் தோன்றிய வாழ்வு முழுவதற்கும் அனுபவம் (experience) அடிப்படையாக உள்ளது. "Experience" என்று தத்துவ ஞானிகள் சொல்லும் சொல்லுக்கு அனுபவம் என்பது அவ்வளவு சரியான தமிழாக்கம் ஆகாது. ஆனால், எனக்கு வேறு சொல் தெரியவில்லை. எனவே, இதனைப் பயன்படுத்து கிறேன். சமயம் என்பது அனுபவித்து உணர வேண்டியதே தவிர, அறிவினால் ஆராய்ந்து பார்க்கக் Galą lugsgörgy. (Religion is something to be experienced) அதைச் சோதனைக் குழாயில் போட்டு குலுக்கிப் பயனில்லை; அனுபவித்துப் பார்க்க வேண்டும். இதிலிருந்து மற்றொரு புதுமையையும் நாம் காண முடியும். மேலைநாடுகட்குச் சென்றால் அவர்கள் பிள்ளைகட்கு நம்மைப்பற்றி அறிமுகப் படுத்தும் வேடிக்கையைப் பார்க்கலாம். "நீங்கள் இந்தியாவிற்குச் சென்றால், இரண்டு முக்கியமான செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அங்கு யாராவது உங்களை விருந்துக்கு அழைத்தால் அதனை உண்மையாக எண்ணிவிடாதீர்கள். இரண்டாவது, நீ எந்தச் சாமானை எடுத்தாலும் சரி, பேரம் பேசி வாங்க அறிந்துகொள்” என்று சொல்லிக் கொடுப்பதனைக் கண்டேன். எவ்வாறு பேரம் பேசுவது என்பதனைச்