பக்கம்:மனக் குகை (நாடகம்).pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனக் குகை 19 SSASAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS --عمض-------- سنیمس مہم سہہ ۔ ۔ہمایہ. மரகதம்: எனக்கு ஒன்றுமே வேண்டாம். ரெயிலில் வந்தது ஒரே அலுப்பாய் இருக்கிறது. படுத்துக் கொள்கிறேன். சீதா.: இரவிலே ஏகாவது பொட்டுப் பொட்டென்று சப்தம் கேட்டால் அதற்காக நீங்கள் மனசை அலட்டிக் கொள்ள வேண்டாம். மரகதம்: என்ன, மாதவன் ஏதாவது பண்ணுவான? சீதா: அப்படி ஒன்றும் இல்லே, சில நாளேக்குக் தாக்கம் பிடிக்காமல் போனுல் எழுந்து படுக்கை யறையிலே யே உலாவுவார். மரகதம்: அதனுலே எதற்கு சப்தம் உண்டாகும்...? சீதா.: கைத்தடியை ஊன்றி ஊன்றி நிலத்திலே சத்தம் பண்ணிக்கொண்டே கடப்பார். - மரகதம்: இதென்ன இது வேடிக்கையாக இருக்கிறதே? நீ எப்படித் துரங்குவாய்? சீதா. தினமும் அப்படி கடக்கமாட்டார். என்றைக்கா வது அவர் உலாவ ஆரம்பித்தால் அன்றைக்கு நான் துங்க மாட்டேன். மரகதம்: அதற்குத் தான் டீ இக்கோக்கில் குடிக்கிருயா? இன்னும் மாதவனுக்கு உடம்பு சரியில்லையா ? சீதா : உடம்புக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. அதெல்லாம் தொந்தரவில்லை. நீங்கள் படுத்து நன்ருகத் துரங்குங்கள். மரகதம் : நீ.......? . சீதா : நான் இந்த நாவலைப் படித்து முடித்து விட்டுத் தான் இன்றைக்குப் படுக்கலாமென்றிருக்கிறேன். மரகதம் : சரி, சீகா-கான் படுத்துக்கொள்கிறேன். (கட்டிலில் படுக்கிருள்.)